Connect with us

“லோகேஷ் கனகராஜின் LCU குறித்து பேசிய Salaar இயக்குனர் பிரஷாந்த் நீல்! என்ன சொன்னார் தெரியுமா?!”

Cinema News

“லோகேஷ் கனகராஜின் LCU குறித்து பேசிய Salaar இயக்குனர் பிரஷாந்த் நீல்! என்ன சொன்னார் தெரியுமா?!”

அடுத்தடுத்து KGF படங்களின் பாகங்களை வெளியிட்டு சர்வதேச அளவில் மாஸ் காட்டினார் இயக்குநர் பிரஷாந்த் நீல். யாஷ் நடிப்பில் வெளியான இந்தப் படம் பீரியட் மற்றும் கேங்ஸ்டர் படமாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் இந்தப் படங்களை தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் சலார் படத்தை இயக்கி முடித்துள்ளார் பிரஷாந்த் நீல். நாளைய தினம் சர்வதேச அளவில் ரசிகர்களை கவர தயாராகியுள்ளது சலார் படம்.

சலார் படத்தில் பிரபாஸுடன் ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஈஸ்வரி ராவ், சரண் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தையும் அடுத்தடுத்து இரு பாகங்களாக உருவாக்க பிரஷாந்த் நீல் திட்டமிட்டுள்ளார். தற்போது ரிலீசாகவுள்ள முதல் பாகத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் இருவரும் நண்பர்களாக நடித்துள்ளனர். இவர்கள் இருவரின் பயணத்தைதான் இரு பாகங்களாக காட்டவுள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் பிரஷாந்த் நீல் தெரிவித்திருந்தார்.

அதற்கேற்ப படத்தின் டிரெயிலரிலும் இதற்கான காட்சிகள் காணப்பட்டன. மிரட்டலாக வெளியான அந்த டிரெயிலர் யூடியூபில் அதிகமான வியூசை பெற்றது. முன்னதாக அதிகமான நண்பர்களின் கதைகள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், இந்த நட்பை பிரஷாந்த் எப்படி அணுகியுள்ளார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது ரிலீசையொட்டி அடுத்தடுத்த பேட்டிகளை பிரஷாந்த் நீல் கொடுத்து வருகிறார்.

இந்தப் படத்திற்கும் KGF படங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார். KGF படங்கள் 1980களின் காலகட்டத்தையொட்டி வெளியான நிலையில், சலார் படம் தற்போதைய காலகட்டத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளதாகவும் இது பீரியட் படம் இல்லை என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். தன்னுடைய படங்களை இணைக்கும் வழி தனக்கு தெரியாது என்றும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

இதுபோன்ற யுக்திகளை தான் அவெஞ்சர் சீரிசில் பார்த்துள்ளதாகவும் தற்போது லோகேஷ் கனகராஜ் அதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் பாராட்டு தெரிவித்துள்ள பிரஷாந்த் நீல், தன்னுடைய படங்களை அதிகமான ரசிகர்களை பார்க்க வைக்க வேண்டும் என்பதை நோக்கியே தான் செயல்படுவதாகவும் அது நாளைய தினம் கண்டிப்பாக நடக்கும் என்றும் கூறியுள்ளார். தனக்கு சலார் படம் மிகப்பெரிய திருப்தியை கொடுத்துள்ளதாகவும் அதற்கு ஒத்துழைத்த பிரபாஸ் மற்றும் பிரித்விக்கு நன்றி என்றும் பிரஷாந்த் நீல் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸில் அர்ச்சனாவை போல் VJ பார்வதிக்கு வரும் குடச்சல், அவஸ்தைப்படும் சீரியல் பிரபலங்கள்

More in Cinema News

To Top