Connect with us

விவாகரத்துக்கு பின்னும் ஜீவி பிரகாஷ் மீது ஏக்கமாக இருக்கும் சைந்தவி, வைரலாகும் பேட்டி

gv2

Cinema News

விவாகரத்துக்கு பின்னும் ஜீவி பிரகாஷ் மீது ஏக்கமாக இருக்கும் சைந்தவி, வைரலாகும் பேட்டி

GV Prakash and Sainthavi: கல்யாணம் பண்ணி கஷ்டப்பட்டு வாழ்வதைவிட விவாகரத்து கேட்டு தனித்தனியாக சந்தோஷமாக வாழ்வது சிறந்தது என்று நினைத்து பிரபலங்கள் பலரும் அடுத்தடுத்து விவாகரத்து கேட்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் ஜிவி பிரகாஷ் சைந்தவியும் கடந்த வருடம் மே மாதம் சமூக வலைதளங்களில் ஒரே நேரத்தில் இரண்டு பேரும் பிரிய போகிறோம் என்று அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்கள்.

ஆனால் யார் யாரையும் குறை சொல்லாமல் மன அமைதிக்கும், முன்னேற்றத்திற்காகவும் நாங்கள் தனிமையே விரும்புகிறோம் என்று கூறியிருந்தார்கள். அதன்படி மார்ச் 24ஆம் தேதி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்கள். அப்பொழுது இருவரும் நேரில் வந்து பரஸ்பரமாக பிரிய போவதை தெரிவித்தார்கள். இந்த சூழ்நிலையில் பல விசாரணைகளை நடத்திய பிறகு கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி விவாகரத்து நோட்டீஸ் முறைப்படி வழங்கப்பட்டது.

இதன் மூலம் இவர்கள் 12 ஆண்டு திருமண உறவு முடிவடைந்து விட்டது. பிரிவின் போது அவர்களின் மகள் அன்வியை பார்த்துக் கொள்ளும் உரிமையை சைந்தவிக்கு வழங்கப்பட்டது. மேலும் குழந்தை வளர்ப்பு முறையில் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டது. இதனை தொடர்ந்து ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி மீண்டும் கலை விழாக்களில், இசை நிகழ்ச்சிகளில் ஒரே மேடையில் பணி செய்ததாக காணப்படுகிறது.

உதாரணமாக, மலேசியாவில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சைந்தவி பாடியதை பிரகாஷ் இசையமைத்து அவர்களும் நன்றாக முடித்ததென்று கூறப்பட்டது. ஊடகங்களில் “Divyabharathi” என்ற நடிகை தொடர்பான கதைகள் பரவின; அதற்கு பிரகாஷ் மற்றும் Divyabharathi இருவரும் “நண்பர்களே, அதிலிருந்து எந்த நெருக்கமும் இல்லை” என்று மறுபடியும் பதிலளித்துள்ளனர்.

பிரிவு குறித்து ஊடகங்கள், சமூக வலைத்தளங்கள், ரசிகர்கள் பல்வேறு பரவலான மனப்பெரும் கருத்துக்களையும் பகிர்ந்துள்ளனர். இதில் உண்மையானது / தவறு என்று தீர்மானிக்க முடியாத பல கூற்று மட்டுமே உள்ளன. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் சைந்தவி யூட்யூப் சேனலில் கொடுத்த பேட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் என்னதான் நாங்கள் தனிப்பட்ட முறையில் பிரிந்தாலும் எங்களுடைய வேலை பொருத்தவரை ஒன்றாக இணைந்து பணி புரிய வேண்டிய அவசியம் இருக்கிறது.

அந்த வகையில் நடந்த கலைநிகழ்ச்சியில் என்ன பாட்டு யார் யார் பாட வேண்டும் என்று முடிவெடுக்கும் விதமாக நாங்கள் இருவரும் பேசிக் கொள்வோம். எங்களுக்குள் எந்தவித சண்டை சச்சரவும் பிரச்சனையும் கிடையாது. இருந்தாலும் எங்களுக்குள் ஒரு தனிப்பட்ட வாழ்க்கை தேவைப்பட்டது என்பதற்காக மட்டுமே நாங்கள் அந்த முடிவை எடுத்தும் என்று சைந்தவி கூறியிருக்கிறார்.

See also  திரையரங்கில் தனுஷ்–அனிருத் கூட்டணி திரும்ப வருகிறது; விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top