Connect with us

கார் ரேஸ் இடையே அஜித் குமாரை சந்தித்த சபரீசன் – வைரல் புகைப்படம்

Cinema News

கார் ரேஸ் இடையே அஜித் குமாரை சந்தித்த சபரீசன் – வைரல் புகைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்குபவர் அஜித் குமார். நடிப்பைத் தாண்டி கார் பந்தயத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வரும் அவர், சமீபத்தில் ஸ்பெயினில் நடைபெற்ற 24 மணி நேர கார் பந்தயத்தில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்தார்.

இதனைத் தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டு அபுதாபியில் நடைபெறவுள்ள சர்வதேச கார் பந்தய போட்டியிலும் அஜித் குமார் ரேசிங் அணி பங்கேற்க உள்ளது. அதற்கு முன்னதாக, மலேசியாவில் தற்போது நடைபெற்று வரும் கார் பந்தய போட்டியிலும் அவரது அணி கலந்து கொண்டு போட்டியிட்டு வருகிறது.

இந்த நிலையில், மலேசியாவில் அஜித் குமாரை நடிகர் சிம்பு, நடிகை ஸ்ரீலீலா, இயக்குநர் சிறுத்தை சிவா உள்ளிட்டோர் நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானது.

அதே வரிசையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகனான சபரீசன், அஜித் குமாரை நேரில் சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  படையப்பா 2வா? ரஜினி ரசிகர்களை ஆவலாக்கிய சவுந்தர்யா பதில்

More in Cinema News

To Top