Connect with us

ஐசியூவில் சிகிச்சை பெறும் ரோபோ சங்கர் – ரசிகர்களை கவலைக்குள்ளாக்கும் உடல்நிலை

Cinema News

ஐசியூவில் சிகிச்சை பெறும் ரோபோ சங்கர் – ரசிகர்களை கவலைக்குள்ளாக்கும் உடல்நிலை

நடிகர் மற்றும் மிமிக்ரி கலைஞர் ரோபோ சங்கர் உடல்நலக்குறைவால் தற்போது சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதிய படப்பிடிப்பில் கலந்து கொண்டபோது திடீரென மயங்கி விழுந்ததால் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பரிசோதனையில், நீர்ச்சத்து குறைபாடு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயக்கம் ஏற்பட்டது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

தொடக்கத்தில் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்ற ரோபோ சங்கர், நேற்று மாலை உடல்நிலையில் சிறிய சிக்கல் ஏற்பட்டதால் ஐசியூவிற்கு மாற்றப்பட்டார். தற்போது அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சின்னத்திரை நிகழ்ச்சிகள் மற்றும் ‘மாரி’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் காமெடி கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற ரோபோ சங்கர், சில மாதங்களுக்கு முன்பு மஞ்சள் காமாலை பிரச்சினையாலும் பாதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் மீண்டும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களையும், குடும்பத்தினரையும் கவலைக்குள் ஆழ்த்தியுள்ளது. அவர் விரைவில் நலம் பெற வேண்டும் என்று ரசிகர்கள் பிரார்த்தித்து வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top