Connect with us

‘காந்தாரா சாப்டர் 1’ டிரெய்லர் அவுட் – ரிஷப் ஷெட்டி பிளாஸ்ட்!

Cinema News

‘காந்தாரா சாப்டர் 1’ டிரெய்லர் அவுட் – ரிஷப் ஷெட்டி பிளாஸ்ட்!

சென்னை: ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘காந்தாரா சாப்டர் 1’, ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2022ஆம் ஆண்டு வெளியான ‘காந்தாரா’ படத்தை எழுதி, இயக்கி, நடித்த ரிஷப் ஷெட்டி, வெறும் ரூ.16 கோடி செலவில் எடுத்த அந்த படத்தை, உலகளவில் ₹500 கோடிக்கு மேல் வசூல் செய்த வெற்றிப் படமாக்கினார்.

இப்போது அதே படத்தின் ப்ரீக்குவல் ‘காந்தாரா சாப்டர் 1’ வரும் அக்டோபர் 2ஆம் தேதி வெளியாக உள்ளது. இதற்கான டிரைலர் இன்று (செப்டம்பர் 22) வெளியானது.

முதல் பாகம் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கர்நாடகாவில் உள்ள கெரடி பழங்குடி மக்கள் – வனத்துறை அதிகாரிகளுக்கிடையேயான மோதல்களை மையமாகக் கொண்டது. குறிப்பாக பழங்குடி மக்களின் பூஜா கோலா நடனம் தான் அந்த படத்திற்கு பெரும் ஆதரவாக அமைந்தது.

முதல் பாகம் வில்லன் மரணத்துடன் முடிந்ததால், ரசிகர்கள் “இரண்டாம் பாகத்தில் என்ன சொல்லப்போகிறார்கள்?” என்ற ஆவலில் இருந்தனர். ஆனால் ரிஷப் ஷெட்டி, “இது தொடர்ச்சிப் படம் அல்ல; கதையின் முன் வரலாறை (prequel) சொல்லப்போகிறோம்” என்று அறிவித்ததும், எதிர்பார்ப்பு பல மடங்கு உயர்ந்தது.

வெளியான டிரைலரில், படம் மன்னர் காலக் கதையாகவும், முக்கிய பாத்திரமான சிவாவின் சிறு வயது அல்லது மூதாதையரின் வாழ்க்கையை மையமாகவும் அமைந்துள்ளது தெளிவாகக் காணப்படுகிறது. ஒவ்வொரு ஃப்ரேமும், ஒவ்வொரு டயலாக்கும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

இந்த டிரைலரை தமிழில் சிவகார்த்திகேயன், இந்தியில் ஹிரித்திக் ரோஷன் வெளியிட்டுள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “அனிரூத் தான் போட்டியா?” – சாய் அபயங்கர் கூறிய சுவாரஸ்யமான பதில்!

More in Cinema News

To Top