Connect with us

விஜய் தேவரகொண்டா குறித்து மனம் திறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா – என்ன சொன்னார் தெரியுமா..?

Cinema News

விஜய் தேவரகொண்டா குறித்து மனம் திறந்த நடிகை ராஷ்மிகா மந்தனா – என்ன சொன்னார் தெரியுமா..?

தென்னிந்திய திரையுலகில் முன்னனி நட்சத்திரங்களாக வலம் வருபவர்கள் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.

சினிமாவில் இந்த ஜோடியின் காம்போ அனைவர்க்கும் பிடித்துப்போக நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக அமைந்தால் அவர்கள் நிஜ வாழ்க்கையில் இந்த இணை சேர வேண்டும் என அனைவரும் விரும்பினர்.

இன்னும் சற்று தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் சூர்யா-ஜோதிகா, அஜித்-ஷாலினி, பிரசன்னா-சினேகா, விக்னேஷ் சிவன்-நயன்தாரா உள்ளிட்ட வரிசையில் இவர்களும் இணைய வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர் .

இந்நிலையில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா பற்றி நிறைய செய்திகள் இணையத்தில் உலா வர அனைவரும் இவர்களின் உறவு குறித்து கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டனர் .

இப்படி இருக்கும் சூழலில் தங்களது உறவு குறித்து நடிகை ராஷ்மிகா பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்.

“நானும் விஜய்யும் ஒன்றாக வளர்ந்தோம். என் வாழ்க்கையில் நான் எது செய்தாலும், அதில் அவரது பங்களிப்பு நிச்சயம் இருக்கும். நான் என்ன செய்தாலும், அவரின் கருத்தை கேட்டே செயல்படுவேன். என்னுடைய வாழ்க்கையில் மற்றவர்களை விட தனிப்பட்ட முறையில் அவர் என்னை நிறைய ஆதரித்துள்ளார்” என நடிகை ராஷ்மிகா தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top