Connect with us

“ரஜினிகாந்த் வெளியிட்ட டீசர்! அபிஷன் ஜீவிந்த் அறிமுக படம் ‘With Love’🔥”

Cinema News

“ரஜினிகாந்த் வெளியிட்ட டீசர்! அபிஷன் ஜீவிந்த் அறிமுக படம் ‘With Love’🔥”

அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.

சசிகுமார் – சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கி பாராட்டு பெற்ற அபிஷன் ஜீவிந்த், அடுத்தப்படியாக தானே கதாநாயகனாக அறிமுகமாகும் படம் குறித்து கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டது. அந்த படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்துள்ளதாக படக்குழு சமீபத்தில் அறிவித்தது.

அபிஷனுக்கு ஜோடியாக கேரளாவின் வளர்ந்து வரும் இளைய நட்சத்திரமான அனஸ்வர ராஜன் நடிக்கிறார். இப்படத்தை ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘லவ்வர்’ படங்களில் இணை இயக்குநராக இருந்த மதன் இயக்கியுள்ளார். MRP என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாக அறிமுகமாகும் படத்தின் டைட்டில் டீசரை இன்று நடிகர் ரஜினிகாந்த் தனது X (Twitter) பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
படத்துக்கு “With Love” என பெயரிடப்பட்டுள்ளது.

இதையடுத்து, ரஜினிகாந்த் தனது பதிவில், “என் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் With Love படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள். கடவுள் ஆசிர்வதிப்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மொத்தத்தில், அபிஷன் ஜீவிந்த் நடிக்கும் ‘With Love’ படம் ரசிகர்களிடம் நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  நயன்தாராவின் ஆடம்பர வாழ்க்கை Birthday Special! சொத்து மதிப்பு

More in Cinema News

To Top