Connect with us

ரஜினி Fans Festival Mode ON! ‘அண்ணாமலை’ மீண்டும் பாக்க Ready-aa?

Cinema News

ரஜினி Fans Festival Mode ON! ‘அண்ணாமலை’ மீண்டும் பாக்க Ready-aa?

ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு, அவர் நடித்த ஒரு கிளாசிக் ஹிட் படம் மீண்டும் திரையரங்குகளில் வர இருக்கிறது. தற்போது தமிழ் சினிமாவில் ரீ-ரிலீஸ் டிரண்ட் வேகமாக செல்லும் நிலையில், நவம்பர் 28ஆம் தேதி சூர்யாவின் அஞ்சான், அஜித்தின் அட்டகாசம் வெளியாவதாக இருக்கும். இதையடுத்து, டிசம்பர் 12 — ரஜினியின் பிறந்தநாள் — அன்று அவர் நடித்த மாபெரும் வெற்றி படம் அண்ணாமலை மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது.

கடந்த வருடம் இதே தினத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கிய பாபா ரீ-ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது. 1992ஆம் ஆண்டு வெளியான அண்ணாமலையில் ரஜினியுடன் குஷ்பு, சரத் பாபு, ரேகா, ராதா ரவி, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இப்போது இந்த சூப்பர் ஹிட் கிளாசிக்கை மீண்டும் திரையரங்குகளில் காணும் வாய்ப்பு கிடைத்துள்ளதால், இந்த ரீ-ரிலீஸ் எந்த அளவு கலெக்ஷன் சாதனை படைக்கிறது என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “கணவன் போல் பிள்ளை…” – ஜாய் கிரிஸில்டாவின் மனதை உருக்கும் பதிவு!

More in Cinema News

To Top