அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி உள்ள புஷ்பா 2 படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தெலுங்கு திரையுலகில் கொடி கட்டி பறக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அல்லு அர்ஜுன் . இவரது நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘புஷ்பா: தி ரைஸ்’.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் பல மொழிகளில் இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிப்படமாக உருவெடுத்தது .
இதுமட்டுமின்றி இப்படம் நடிகர் அல்லு அர்ஜுனுக்கு தேசிய விருதையும் பெற்று தந்தது . இந்த படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அமோக வரவேற்பால் தற்போது புஷ்பா பார்ட் 2 விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.
இந்த படத்திலும் ஏரளமான முன்னணி நட்சத்திரங்கள் ஒப்பந்தமாகி நடித்து வருகின்றனர்.இந்நிலையில் இப்படத்தின் அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படத்தின் டீஸரை படக்குழு வெளியிட்டுள்ளது.
மிரட்டலான தோற்றத்துடன் காட்சிப்படுத்தப்பட்ட அல்லு அர்ஜுனின் காட்சிகள் பார்க்கவே மிரளவைத்துள்ளது . இதோ அந்த டீசரை பார்த்து எப்படி இருக்கிறது என்பதை சொல்லுங்கள்.
மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….
அருண்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம், மார்ச் 27ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. விக்ரம், எஸ்.ஜே. சூர்யா,...
விடாமுயற்சி படத்தின் தள்ளிப்போக்கைச் சுற்றியுள்ள புதிய தகவல்கள், தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரிய கவனத்தை ஈர்த்துள்ளன. மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி...
சிவகார்த்திகேயனின் திரைப்பயணம் மற்றும் அண்மைய வெற்றிகள் அவரின் சாதனையை இன்னும் உயர்த்தி இருக்கின்றன. அமரன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி மட்டுமின்றி, அவர்...