Connect with us

புகழின் மகள் ரிதன்யா – 11 மாதத்தில் உலகச் சாதனை! ரசிகர்கள் ஆச்சரியம்!

Cinema News

புகழின் மகள் ரிதன்யா – 11 மாதத்தில் உலகச் சாதனை! ரசிகர்கள் ஆச்சரியம்!

நடிகர் புகழ், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். தொலைக்காட்சியில் பல நகைச்சுவை நிகழ்ச்சிகளில் கலக்கி தனக்கென அடையாளம் உருவாக்கிய அவர், பின்னர் சினிமாவிலும் தன் திறமையை வெளிப்படுத்தி சிக்ஸர், கைதி, வலிமை, யானை, சபாபதி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

சமீபத்தில் அவர் ஹீரோவாக நடித்த Mr. Zoo Keeper திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 2022ல் நீண்டநாள் காதலியான பென்ஸி ரியாவை திருமணம் செய்துகொண்ட அவர், 2023ல் தங்கள் மகள் ரிதன்யா பிறந்ததை மகிழ்ச்சியுடன் அறிவித்தார். சமீபத்தில் மகளின் முதல் பிறந்தநாளை சிறப்பாகக் கொண்டாடிய தம்பதியினர், சின்னத்திரை நட்சத்திரங்கள் பலருடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

மிக இளம் வயதிலேயே தன்னுடைய திறமையால் உலகையே ஆச்சரியப்படுத்தி வரும் ரிதன்யா, சில மாதங்கள் வயதிலேயே 2 கிலோ டம்பிள் 11 விநாடிகள் தூக்கி சாதனை படைத்திருந்தார். தற்போது வெறும் 11 மாதம் 14 நாட்களிலேயே 45 படிகளை இடைவிடாமல் ஏறிய சிறுமி என்ற சாதனையை படைத்து International Book of Records புத்தகத்தில் பெயர் பதித்துள்ளார்.

தந்தையின் நகைச்சுவை திறமையும், தாயின் உறுதியும் கலந்த இந்தச் சிறுமி சிறுவயதிலேயே அசாத்திய திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பெருமையுடன் வாழ்த்தி, “இவள் தந்தையைவிட பெரிய ஸ்டார் ஆவாள்!” என உற்சாகமாக பாராட்டி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் தமிழ் 9-க்கு எதிராக சென்னை மாநகரில் பெரிய அளவில் போராட்டம்!

More in Cinema News

To Top