Connect with us

ஆசை ஆசையாய் வாங்கிய சொகுசு பங்களா – திடீரென வெளியேறிய பிரியங்கா சோப்ரா

Cinema News

ஆசை ஆசையாய் வாங்கிய சொகுசு பங்களா – திடீரென வெளியேறிய பிரியங்கா சோப்ரா

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை பிரபல நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா தனது பிரம்மாண்ட சொகுசு பங்களாவில் இருந்து வெளியேறி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரைப்பட உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தவர் நடிகை பிரியங்கா சோப்ரா.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் ஹாலிவுட்டிலும் தனது கால் தடத்தை அழுத்தமாக பதித்தார் .

இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு நிக் ஜோனஸ் என்ற பிரபல பாடகரை காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரியங்கா பின்னர் அவருடன் வெளிநாட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

ஒரு பக்கம் திரைப்படங்களில் நடிப்பது மறுபக்கம் பல தொழில்கள் செய்வது என மிகவும் பிஸியான இவரை உலகின் 100 சக்திவாய்ந்த பெண்களில் ஒருவராக ஃபோர்ப்ஸ் இதழ் தேர்ந்தெடுத்திருந்தது.

திருமணம் முடிந்த கையோடு வாடகை தாய் மூலம் அழகிய பெண் குழந்தைக்கு தாயான பிரியங்கா கடந்த 2019 ஆண்டு 20 மில்லியன் டாலர்கள் கொடுத்து லாஸ் ஏஞ்சல்ஸில் பிரம்மாண்ட வீடு ஒன்றை வாங்கி அதில் வசித்து வந்துள்ளார் .

இந்திய மதிப்பில் அந்த பிரம்மாண்ட மாளிகையின் மதிப்பு சுமார் 160 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது .

இவ்ளோ பணம் கொடுத்து வாங்கி இருந்த அந்த வீட்டில் தற்போது நீர் கசிவு ஏற்பட்டு, பூஞ்சைகளால் பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாகவும் இத்தகாரண்மாக அந்த வீட்டை விட்டு தனது கணவர் மற்றும் குழந்தையுடன் பிரியங்கா வெளியேறி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .

இதுமட்டுமின்றி அந்த வீட்டை விற்பனை செய்தவர்கள் மீது இழப்பீடு கேட்டு பிரியங்கா சோப்ரா வழக்கு தொடர்ந்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "குறி வைச்சா இரை விழனும்" வேட்டையன் பட டப்பிங்கில் நடிகர் ரஜினிகாந்த் - வைரல் வீடியோ..!!

More in Cinema News

To Top