Connect with us

கரூர் மரணங்கள்: “நாங்களும் ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம்” – எஸ்.ஏ. சந்திரசேகர்

Politics

கரூர் மரணங்கள்: “நாங்களும் ஆழ்ந்த மன வேதனையில் இருக்கிறோம்” – எஸ்.ஏ. சந்திரசேகர்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் அம்சவேணி (83) இன்று (அக். 8) மூப்பினால் காலமானார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது மகன் எல்.கே. சுதீஷின் இல்லத்தில் அம்சவேணியின் உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

முதலில் ஈரோட்டில் இன்று நடைபெற இருந்த பூத் முகவர்கள் ஆலோசனைக்கூட்டத்தில் பங்கேற்க பிரேமலதா விஜயகாந்த் மற்றும் எல்.கே. சுதீஷ் இருந்தபோதிலும், தாயார் மறைவு தகவலைத் தொடர்ந்து அவசரமாக சென்னைக்குத் திரும்பினர்.

இறுதி ஊர்வலம் நாளை (08.10.2025) மதியம் 1 மணிக்கு இல்லத்திலிருந்து தொடங்கி, வடபழனியில் உள்ள ஏவிஎம் மின்மயானத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெறும்.

அம்சவேணிக்கு அரசியல், சினிமா உலகத்தைச் சேர்ந்த பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குநருமான எஸ்.ஏ. சந்திரசேகர் சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“பிரேமலதா அவரின் தாயாரை மிகவும் நன்றாக பார்த்துக்கொண்டிருந்தார். நேற்று வரை அவர் நலமாக இருந்தார், அதனால் பிரேமலதா கூட்டத்துக்குச் சென்றிருந்தார். எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்,” என்று கூறினார்.

பின்னர் செய்தியாளர்கள் கரூர் சம்பவம் குறித்து கேள்வி எழுப்பியபோது, எஸ்.ஏ. சந்திரசேகர் கடுமையாகக் கூறினார்:

“நாங்களே இப்போது ஒரு இறப்பு வீட்டில் மனவேதனையில் இருக்கிறோம். இப்படியான நேரத்தில் இப்படிப் பட்ட கேள்விகள் கேட்பது ஏற்றதல்ல,” என தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய தலைமுறை சேனல் முடக்கம்: “கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்படுகிறதா, முதல்வரே?”

More in Politics

To Top