Connect with us

அரசியல் வதந்திகள் – பாஜகவில் சேர்கிறாரா மீனா?

Cinema News

அரசியல் வதந்திகள் – பாஜகவில் சேர்கிறாரா மீனா?

Meena: 90களில் தென்னிந்திய திரைத்துறையில் “முடிசூடா ராணி” எனப் புகழ்பெற்ற மீனா, குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் முன்னணி நடிகையாக உயர்ந்தார். ரஜினி, கமல், அஜித், விஜய், சிரஞ்சீவி போன்ற டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்த அவர், தனது அழகும் நடிப்புத் திறனாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். நீண்ட காலம் திரை உலகை ஆட்சி செய்த பிறகு, இசைத்துறையைச் சார்ந்த வித்யாசாகருடன் திருமணம் செய்து, குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார்.

திருமணத்திற்குப் பிறகு மீனா சினிமாவிலிருந்து ஒரு அளவு விலகி, கணவரும் மகளான நைனிகாவும் இணைந்து நிம்மதியாக வாழ்ந்து வந்தார். ஆனால் கொரோனா காலத்தில் வித்யாசாகர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தது, மீனாவை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியது. நீண்ட காலம் பொதுவெளியில் இருந்து விலகியிருந்த அவர், நண்பர்களின் ஆதரவுடன் மெல்ல மெல்ல பழைய நிலைக்குத் திரும்பினார்.

அத்துடன் கடந்த சில மாதங்களாக மீனாவைச் சுற்றி பல வதந்திகள் கிளம்பின. அவர் பாஜகவில் சேரப்போகிறார், அரசியலுக்கு வருகிறார் என்ற பேச்சுகள் பரவின. பிரதமர் மோடி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் மீனா கலந்துகொண்டதுதான் இந்த வதந்திகளுக்கு காரணமாக அமைந்தது. ஆனால் இதுகுறித்து மீனா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பதிலும் அளிக்கவில்லை.

இந்த நிலையில், பத்திரிகையாளர் சேகுவேரா பேட்டியில் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார். “மீனா விஜய்யை சந்தித்தது பழைய விஷயம், முன்னாள் துணை ஜனாதிபதியையும் சந்தித்தது சாதாரணம். ஒரு பெண் தனியாக வாழ்ந்தாலே மக்கள் பலவிதமாக பேசுவார்கள்,” என்று அவர் கூறினார். மேலும், கலா மாஸ்டர் பாஜகவுடன் தொடர்புடையவர் என்பதால் மீனா பிரதமர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகவும், அதற்கு அரசியல் காரணமல்ல, ஒரு தனிப்பட்ட நிலப் பிரச்சனைக்காக சில சந்திப்புகள் நடந்ததாகவும் அவர் விளக்கம் அளித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2025 நவம்பர் 2 ஆம் தேதி, இந்தியா மகளிர் கிரிக்கெட் அணிக்கு அது ஒரு வரலாற்று நாள்.

More in Cinema News

To Top