Connect with us

நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்..!

Cinema News

நடிகர் மன்சூர் அலிகான் நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்..!

நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை திரிஷா உடன் நடிக்கிறேன் என்றதும், நிச்சயமாக ஒரு பெட்ரூம் சீன் இருக்கும், நடிகை குஷ்பூ, ரோஜாவை கட்டிலில் தூக்கி போட்டு நடித்ததை போல் த்ரிஷாவுடனும் அப்படி நடிக்கலாம் என்று நினைத்தேன் ஆனால் முடியாமல் போனது என மிகவும் கீழ்த்தனமாக நடிகர் மன்சூர் அலிகான் பேசியது இனையத்தில் வைரலான நிலையில் அவருக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் மண்சசூர் அலிகான் நடிகை த்ரிஷா குறித்து நான் எதுவும் தவறாக பேசவில்லை என்றும் எனக்கு கண்டனம் தெரிவித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையை திரும்ப பெற வேண்டும் என்றும் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது நடிகை த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசிய விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டும் என சென்னை காவல்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

தமிழ் திரையுலகினர் மட்டுமின்றி வேற்று மொழி நடிகர்களும் நடிகர் மன்சூர் அலிகானுக்கு தொடர்ந்து கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது காவல் துறையும் சட்ட ரீதியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  15 ஆண்டுகள் தொலைக்காட்சி பயணத்தை கொண்டாடிய மணிமேகலை – ஜீ தமிழில் ஸ்பெஷல் சர்ப்ரைஸ்!

More in Cinema News

To Top