Connect with us

பார்வதி–விக்ரம் சண்டை உச்சம்… விக்ரமின் கண்ணீர் பேச்சு வைரல்!

Bigboss Season 9

பார்வதி–விக்ரம் சண்டை உச்சம்… விக்ரமின் கண்ணீர் பேச்சு வைரல்!

பிக் பாஸ் தமிழ் சீசன் 9ல் எவருடனும் சண்டையிட தயங்காத போட்டியாளராக ரசிகர்கள் குறிப்பிடும் பெயர் vj பார்வதி. முதல் வாரம் வெளியேறிய பிரவீன் காந்தி முதல், வைல்ட் கார்டில் வந்த நான்கு போட்டியாளர்கள் வரை — வீட்டில் உள்ள ஒவ்வொருவருடனும் பார்வதி வாக்குவாதம் செய்ததுதான் ஹைலைட்.

சில வாரங்களுக்கு முன் விஜய் சேதுபதி வீட்டிற்குள் வந்ததிலிருந்து கொஞ்சம் கட்டுப்பாட்டில் இருந்தாலும், இந்த வாரம் மீண்டும் அவரின் அதிரடி ஆரம்பமாகிவிட்டது. குறிப்பாக பார்வதி – விக்கல்ஸ் விக்ரம் காம்பினேஷன் முழு வீட்டையும் தலைகுனிய வைத்துள்ளது.

இந்த வாரம் ஆரம்பித்ததிலிருந்தே பார்வதி மற்றும் விக்கல்ஸ் விக்ரம் இடையே தொடர்ந்து பிரச்னை. விக்ரமைக் குறித்து “வக்ரம் பிடித்த விக்ரம்” என விமர்சித்தது, ரேங்கிங் டாஸ்க்கில் அவரை 13வது இடத்தில் வைத்தது — இதெல்லாம் இருவரின் கோபத்தை இன்னும் அதிகரித்தது.

பிக் பாஸ் கூட இருவரையும் எதிரெதிரே அமர வைத்து “கானா சாம்ராஜ்யம் – தர்பீஸ் சாம்ராஜ்யம்” என சுவாரஸ்யமாக டாஸ்க் கொடுத்து சூழலை சூடாக்கினார்.

பார்வதி ஒரு வாக்குவாதத்தில் இறங்கினால், அதை எப்படியும் தானே வெல்ல வேண்டும் என்ற மனநிலையில் தொடர்ந்து பேசுவார் என ரசிகர்கள் சொல்லிவருகிறார்கள். எதிரில் இருக்கும் நபர் அமைதியாக இருந்தாலும் அவர் சுமார் 10 நிமிடம் தொடர்ந்து அவ்வாறே கத்தி பேசுவார்.

இந்த ஸ்டைலை தாங்காமல் இருக்கும் ஒரே போட்டியாளர் — விக்கல்ஸ் விக்ரம். காரணம்: விக்ரம் தனது குரலை மாற்றி, உடல் மொழியை மாற்றி நகைச்சுவையாக பதில் அளிப்பதால் பார்வதிக்கு அது மேலும் கோபத்தை ஏற்படுத்துகிறது.

“நான் ஒரு கோழை… பயமா இருக்கேன்…” – விக்ரமின் ட்ரோல் ரியாக்ஷன் வைரல்: ரேங்கிங் டாஸ்க்கில் தன்னை 13வது இடத்தில் வைத்ததற்காக பார்வதி கடுப்புடன் விக்ரமிடம், “பயமா விக்ரம்?” என்று கேட்க, விக்ரம் உடனே தனது குரலை மாற்றி:

“ஆமாம்… எனக்கு பயம்… பார்வதியைக் கண்டு பயம்… நான் ஒரு கோழை… நான் போய் தூக்குல தொங்குறேன்…” என்று ட்ரோல் செய்யும் ஸ்டைலில் பேசத் தொடங்கினார். கடைசியாக “போடி!” என்று கத்தியும் விட்டார்.

இந்த காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. பலர் விக்கல்ஸ் விக்ரமின் கிண்டல் ஸ்டைலுக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் பதிவு செய்து வருகிறார்கள்.

More in Bigboss Season 9

To Top