Connect with us

சூதாட்ட விளம்பரங்களில் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்கமாட்டேன் – ஜி.வி.பிரகாஷ் உறுதி

Cinema News

சூதாட்ட விளம்பரங்களில் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்கமாட்டேன் – ஜி.வி.பிரகாஷ் உறுதி

குளிர்பான விளம்பரங்களில் எத்தனை கோடி கொடுத்தாலும் நடிக்கமாட்டேன் என நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் உறுதியுடன் தெரிவித்துள்ளார்.

சினிமாவில் வாய்ப்பு தேடும் கலைஞர்களுக்கு பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட செயலி தான் ‘ஸ்டார் டா’ என்ற செயலி .

இந்த செயலியின் அறிமுக விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் கலந்துகொண்டார் .

இதையடுத்து விழாவில் பேசிய ஜி.வி.பிரகாஷ் கூறியதாவது :

எனக்கு எப்போதும் புதுமுகங்களுடன் பணியாற்றுவது மிகவும் பிடிக்கும். இப்போதும் பெரிய இயக்குநர்களாக இருக்கும் வெற்றிமாறன், அட்லீ, ஏ.எல்.விஜய் ஆகிய இயக்குநர்களின் ஆரம்ப படங்களில் நான் இசையமைத்துள்ளேன்.

என் நடிப்பில் இதுவரை 23 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் 17 படங்கள் அறிமுக இயக்குநர்களின் இயக்கத்தில் நடித்துள்ளேன்.

குளிர்பான விளம்பரங்களில் எத்தனை கோடி கொடுத்தாலும் நான் நடிக்கவே மாட்டேன். சூதாட்ட விளம்பரங்களுக்கு கோடிக்கணக்கில் சம்பளத்துடன் அழைப்பு வந்தது. பண்ணமாட்டேன் என உறுதியாக கூறிவிட்டேன்.

இனி வரும் காலங்களில் என்னுடைய படங்களுக்கும் இந்த செயலி மூலமே நடிகர்களை தேர்வு செய்ய முயற்சிக்கிறேன் என ஜி.வி.பிரகாஷ் தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top