Connect with us

நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகை நிவேதா பெத்துராஜ் – சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு!

Politics

நீதித்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகை நிவேதா பெத்துராஜ் – சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு!

நடிகை நிவேதா பெத்துராஜ், திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா தர்காவில் விலங்கு பலியிடல் குறித்து மதுரை உயர்நீதிமன்றம் விதித்த தடை உத்தரவுக்கு தனது பாராட்டை தெரிவித்தார். சமீபத்தில் அந்த தர்காவில் ஆடு, கோழி உள்ளிட்ட விலங்குகளை பலியிடும் பழக்கத்துக்கு நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தீர்ப்பை பலரும் வரவேற்ற நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது “எக்ஸ்” (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு நீதித்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் அவர் கூறியிருந்ததாவது: “திருப்பரங்குன்றத்தில் நமது பகிரப்பட்ட பாரம்பரியத்தைப் பாதுகாத்ததற்காக நீதித்துறைக்கு இதயம் கனிந்த நன்றி. இது நமது பண்பாடு மற்றும் மத நம்பிக்கைகளின் மரியாதையை நிலைநாட்டும் ஒரு முக்கியமான தீர்ப்பு. அமைதி, பாரம்பரியம் மற்றும் நம்பிக்கையை பாதுகாப்பது போன்ற அடிப்படை விஷயங்களை அங்கீகரிக்க நாம் போராட வேண்டிய நிலை ஒருபோதும் வரக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

நிவேதாவின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பலரும் அவரின் பார்வையை ஆதரித்து கருத்து பதிவுகளை வெளியிட்டுள்ளனர். சிலர், “நம்பிக்கையும் பாரம்பரியமும் ஒரே சமயத்தில் மதிக்கப்பட வேண்டும்” எனக் கூறியுள்ளதுடன், மற்றவர்கள் நீதித்துறையின் தீர்ப்பை வரவேற்று நிவேதாவை பாராட்டியுள்ளனர். இந்த விவகாரம் மீதான அவரது கருத்து, சமூக மற்றும் மத உணர்வுகளை சமநிலையில் பேணும் பொறுப்பான நிலைப்பாடாகப் பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  2026 தேர்தலுக்குத் தயாராகும் அதிமுக — கூட்டணிக்காக கையேந்தியும், மூன்றாம் இடமே நிச்சயம்! ஓபிஎஸ் அதிரடி விமர்சனம்

More in Politics

To Top