Connect with us

வடசென்னை படத்தின் மூலம் சிம்புக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள்

simbu

Cinema News

வடசென்னை படத்தின் மூலம் சிம்புக்கு வரும் நெகட்டிவ் விமர்சனங்கள்

Simbu: பிரபல பத்திரிகையாளரான பிஸ்மி சமீபத்தில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்தார். அதில், வெற்றிமாறன் இயக்கும் அரசன் படத்துடன் தொடர்பாக சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

பிஸ்மி கூறியது,

வெற்றிமாறன்–சிம்புவும் இணைந்திருக்கும் அரசன் படத்திற்கு தனுஷ் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளார். வாடிவாசல் படம் டிராப்பானதால், வெற்றிமாறன் சீக்கிரமே புதிய படத்தை செய்ய வேண்டும் என நினைத்தார்; ஆனால் நேரமின்றி, வடசென்னை சம்பந்தமாக ஏற்கனவே இருக்கும் கதையை அடிப்படையாகக் கொண்டு படத்தை உருவாக்க நேர்ந்தது.

பிஸ்மி மேலும் சொல்லும் போது:

இந்த படத்திற்கான அனுமதியை வெற்றிமாறன் தனுஷிடம் கேட்டார். தனுஷ் உடனே சம்மதம் தெரிவித்து, தனது மேனேஜரை அழைத்து வடசென்னை கதையை பயன்படுத்த வெற்றிமாறனுக்கு முழு உதவி செய்யச் சொன்னார். இதுவே படத்தை ஆரம்பித்த முக்கிய காரணமாக இருக்கிறது.

பிஸ்மி கடைசியாக அரசன் ப்ரோமோவைப் பற்றி கூறியதைப் பகிர்ந்தார்:

சிம்பு சென்னையில் பேசும் பாஷை இந்த ப்ரோமோவில் முழுமையாக இயல்பாக ஒட்டவில்லை; சற்று செயற்கையாகவே தெரிகிறது. அதாவது அரசன் படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில், சிலர் சிம்பு பயன்படுத்திய சென்னை பாஷை குறித்து எதிர்மறையாக கருத்து தெரிவித்துள்ளனர். “சிம்புவின் சென்னை பாஷை இயல்பாக இல்லை, சற்று செயற்கையாக உள்ளது” என சிலர் கூறியுள்ளனர்.

ஆனால் இதற்கு எதிராக சில ரசிகர்கள், அது ஒரு பாதி முயற்சி, படத்தை மொத்தமாக பார்க்கும் பொழுது அந்த உணர்வு புரியும் என சிம்புவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். இருவிதமான எதிர்வினைகளும் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் நிலையில், ரசிகர்கள் தற்போது தனுஷ்–வெற்றிமாறன் இணையும் அடுத்த படத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மாரி செல்வராஜின் தொடர் வெற்றி, விக்ரம் மகனுக்கு பிறந்த விடிவு காலம்

More in Cinema News

To Top