Connect with us

அடுத்த அறிக்கையை வெளியிட்ட நயன்தாரா – இந்த முறை தனுஷ் கிடையாது..!!

Cinema News

அடுத்த அறிக்கையை வெளியிட்ட நயன்தாரா – இந்த முறை தனுஷ் கிடையாது..!!

நடிகை நயன்தாராவின் ஆவணப்படம் ஒருபக்கம் நல்ல வரவேற்பை பெற்று வந்தாலும் இந்த படத்தை வைத்து ஏற்பட்டுள்ள பிரச்னை இன்னும் அணியாமல் புகைந்துகொண்டே இருக்கிறது.

நயன்தாராவின் ஆவணப்படமான Nayanthara: Beyond the Fairy Tale படத்திற்காக நானும் ரௌடி தான் படத்தின் சில காட்சிகளை சேர்க்க அப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் மறுப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல் 3சில நொடிகளே வரும் கட்சிக்கு 10 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் எங்கள் வாழ்வின் முக்கிய தருணங்கள் சேர்க்க தங்களிடம் முறைப்படி அனுமதி கேட்டு இரண்டு வருடமாக காத்திருந்தும் அதை தராமல் மறுத்து எங்களை மனஉளைச்சலில் ஆழ்த்தியதாக3 பக்கங்கள் கொண்ட அறிக்கையை நயன்தாரா வெளியிட்டார்.

இந்த அறிக்கை திரைத்துறை மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்த நிலையில் நயன்தாராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் இணையத்தில் இரண்டு விதமான கருத்துகள் இதற்கு வந்தது.

தற்போது Nayanthara: Beyond the Fairy Tale ஆவணப்படம் வெளியாகிவிட்ட நிலையில் நயன்தாரா அது பற்றி புது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இதில் தான் கேட்ட உடன் மறுபேச்சு இல்லாமல் உடனே NOC சான்றிதழ் கொடுத்த தயாரிப்பாளர்கள் பெயர்களை குறிப்பிட்டு நன்றி கூறி இருக்கிறார்.

ஷாருக் கான் தொடங்கி தமிழில் அவர் நடித்த படங்களில் தயாரிப்பாளர்கள் பலரது பெயரை குறிப்பிட்டு நன்றி கூறி இருக்கிறார் நயன்தாரா . இதில் நடிகர் தனுஷ் பெயரை அவர் குறிப்பிடவில்லை.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top