Connect with us

65 வயது சூப்பர் ஸ்டாருடன் நான்காவது முறையாக கைகோர்க்கும் நயன்தாரா

Cinema News

65 வயது சூப்பர் ஸ்டாருடன் நான்காவது முறையாக கைகோர்க்கும் நயன்தாரா

Nayanthara: தென்னிந்திய திரையுலகில் லேடி சூப்பர்ஸ்டார் என ரசிகர்களால் பெருமையாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா, தற்போது பிஸியாக பல மொழிகளில் தொடர்ந்து படங்கள் செய்து வருகிறார். இவரது நடிப்பில் டியர் ஸ்டுடென்ட்ஸ், ராக்காயி, டாக்சிக், மூக்குத்தி அம்மன் 2, மன சங்கரா வரபிரசாத் காரு, மண்ணாங்கட்டி போன்ற பல படங்கள் தற்போது உருவாகி வருகின்றன.

இந்நிலையில், நயன்தாராவின் அடுத்த புதிய படம் குறித்த ஒரு சுவாரஸ்யமான அப்டேட் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.நயன்தாரா அடுத்ததாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்க உள்ளார்.

தற்போது 65 வயதை எட்டியுள்ள பாலகிருஷ்ணா, இன்னும் தனது திரை ஆற்றலால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இந்த புதிய படத்தை இயக்குநர் கோபிசந்த் மல்லினேனி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது.

மிகுந்த வசூல் சாதனைகளை படைத்த Veera Simha Reddy படத்துக்குப் பிறகு, இந்த கூட்டணி மீண்டும் உருவாக இருப்பது ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும், இந்த படம் ஒரு வரலாற்று பின்னணியிலான மகத்தான கதைக்களம் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.குறிப்பாக, இதற்கு முன்பு நயன்தாரா மற்றும் பாலகிருஷ்ணா இணைந்து நடித்த படங்கள் — சிம்ஹா (2010),
ராமா ராஜ்ஜியம் (2011), ஜெய் சிம்ஹா (2018) இந்த மூன்று படங்களும் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தன.

அதனால், இவர்களின் நான்காவது இணைப்பு மீண்டும் ஒரு ப்ளாக்பஸ்டர் ஆகும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  "சுறா" வசனம் வைரல் – TVK தலைவர் விஜய்யை குறிவைக்கும் ட்ரோல் அலையால் அரசியல் சூடு!

More in Cinema News

To Top