Connect with us

வீட்டு மொட்டை மாடியில் புது ஆபிஸ் போட்ட நயன்தாரா – அவரே வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..!!!

Cinema News

வீட்டு மொட்டை மாடியில் புது ஆபிஸ் போட்ட நயன்தாரா – அவரே வெளியிட்ட வைரல் புகைப்படங்கள்..!!!

நடிகையும் வளர்ந்து வரும் தொழிலதிபருமான நயன்தாரா தனது சொகுசு பங்களாவின் மேல் அமைத்துள்ள புதிய அலுவலகத்தின் புகைப்படங்கள் தற்போது செம வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இவரும் தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வரும் விக்னேஷ் சிவனும் நீண்ட நெடு நாட்களாக காதலித்து வந்த நிலையில் கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோர் சம்மத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்தில் பல மொழிகளின் சூப்பர் ஸ்டார்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர் பின்னர் இந்த ஜோடி வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தனர்.

சினிமாவில் உச்சத்திற்கு சென்றுள்ள இந்த ஜோடி தற்போது சுயதொழில்களில் அதிகம் ஆர்வம் காட்டி தற்போது வளர்ந்து வரும் இளம் தொழிலதிபர்களாக வலம் வருகின்றனர்.

பணத்திற்கு எந்தவித பஞ்சமும் இல்லாமல் இருக்கும் இந்த ஜோடி சென்னை போயஸ் கார்டனில் ஒரு பிரம்மாண்ட வீட்டை வாங்கியதாக கூறப்படும் நிலையில் அந்த வீட்டின் மொட்டை மாடியில் தற்போது ஒரு அலுவலகத்தை கட்டி முடித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த அலுவலகத்தை கட்டி முடித்ததால் தனது கனவு நினைவாகியதாகவும் புதிய ஆரம்பம் தனக்கு ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த அலுவலகத்தின் புகைப்படங்களை வெளியீட்டுக்கு நடிகை நயன்தாரா உருக்கமாக தெரிவித்துள்ளார் .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

Advertisement
 

Trending

 
Advertisement
To Top