Connect with us

“12 வருட பயணம் கார்த்திக் யாமினி..காதல் பயணம்..வாழ்வின் பயணம்!”

Cinema News

“12 வருட பயணம் கார்த்திக் யாமினி..காதல் பயணம்..வாழ்வின் பயணம்!”

இன்றோடு மயக்கம் என்ன படம் வந்து 12 ஆண்டுகள் நிறைவு பெற்று இருக்கின்றது..இப்படம் மிகவும் மக்களை தொட்ட படம் என்றும் சொல்லலாம்..

கார்த்திக் சுவாமிநாதன் என்னும் இளைஞர் புகைப்படக் கலையின் மீது ஆர்வம் கொண்டிருக்கிறார்…ஒரு கட்டத்தில் தாம் பெரிதாக நேசித்த புகைப்படக் கலைஞரிடம் இருந்து தன்னுடைய புகைப்படம் திருடப்பட்டு, அதற்குண்டான அங்கீகாரம் கிடைக்காததால் அவரின் மன நிலை மொத்தமாக மாறுகின்றது..

அதன்பின் கார்த்திக்குக்கு எல்லாமுமாக இருந்து குழந்தைபோல் பார்த்துக்கொள்வார் மனைவி யாமினி என்றும் சொல்லலாம்…அதனை போல எப்போதும் துணை நிற்கும் நண்பர்கள் என அனைத்தும் அவருக்கு நன்மையாக வாழ்க்கையை மாற்றுகிறது…..

இறுதியாக தான் யாரால் இப்படி ஆகினாரோ அவர் முன் சிறந்த வனவிலங்கு புகைப்படக்கலைஞர் என்னும் சர்வதேச விருதை வெல்கிறார் கார்த்திக் சுவாமிநாதன்…இதற்கு எல்லாமுமாக இருந்த மனைவி யாமினியின் படத்தை சர்வதேச விருது பெறும் மேடையில் எடுத்துக்காட்டி நன்றி சொல்லி எடுத்து காட்டுகிறார்..

இப்படி ஒரு காதல் கலை என மனதை வருடிய படமாக இது இன்றும் மக்களின் இதயத்தில் இருக்கின்றது..இதற்கு ஜிவி இசை அற்புதமாகவும்..செல்வராகவனின் சிறந்த கவியமாகவும் இது சிறப்பு தருகின்றது..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரஜினி மகள்களைப் பற்றி தனுஷ் பேசிய வீடியோ வைரல்!

More in Cinema News

To Top