Connect with us

மான்யா ஆனந்த் பேட்டி வைரல்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் மேனேஜர்

Cinema News

மான்யா ஆனந்த் பேட்டி வைரல்: சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த தனுஷ் மேனேஜர்

தனுஷின் மேனேஜர் மீது செய்யப்பட்ட போலி ‘காஸ்டிங் கால்ஸ்’ சர்ச்சையை தொடர்ந்து புதிய விளக்கம் வெளியாகியுள்ளது. சீரியல் நடிகை மான்யா ஆனந்த் ஒரு பேட்டியில், தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பெயரை பயன்படுத்தி ஒருவர் அணுகி, பட வாய்ப்புக்காக ‘அட்ஜஸ்ட்மென்ட்’ கோரியதாக கூறினார்.

அந்த பேட்டியின் ஒரு சிறிய பகுதியை மட்டும் வெட்டி சமூக ஊடகங்களில் பரப்பியதால், நடிகை தனுஷ் மற்றும் அவரது மேனேஜர் மீது குற்றச்சாட்டுகள் சாட்டியதாக செய்திகள் பறந்தன. இதற்கு தெளிவுபடுத்திய மான்யா,
“நான் யாரையும் குற்றம் சாட்டவில்லை. என்னை அணுகியவர் போலி நபர் இருக்கலாம். தனுஷின் பெயரை தவறாக பயன்படுத்துகிறார்கள் என்பதே என் கருத்து. முழுப் பேட்டியையும் பார்த்தால்தான் உண்மை புரியும்,” என தெரிவித்துள்ளார்.

சர்ச்சையைத் தொடர்ந்து, தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். “2024 ஜனவரி, 2025 பிப்ரவரி மாதங்களிலேயே என் பெயரில் அல்லது Wunderbar நிறுவனத்தின் பெயரில் வரும் காஸ்டிங் கால்ஸ் போலியானவை என்று தெரிவித்திருந்தேன். தற்போது வைரல் ஆகும் இந்த இரண்டு எண்களும் எனது எண்கள் அல்ல. என் புகைப்படத்தையும் தவறாக பயன்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது,” என அவர் கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஆண்பாவம் பொல்லாதது பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் இதோ!

More in Cinema News

To Top