Connect with us

ஜனநாயகன்’ படத்தில் மமிதா பைஜூ… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Cinema News

ஜனநாயகன்’ படத்தில் மமிதா பைஜூ… சம்பளம் எவ்வளவு தெரியுமா?

மலையாள சினிமாவில் இருந்து அறிமுகமாகி, குறுகிய காலத்திலேயே தென்னிந்திய ரசிகர்களிடையே தனக்கென வலுவான இடத்தைப் பிடித்த நடிகை மமிதா பைஜூ, விஜய்யுடன் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள படம் ‘ஜனநாயகன்’. இந்த படத்தில் அவர் வழக்கமான கேரக்டர்களை விட மாறுபட்ட, முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஆக்ஷன் காட்சிகளில் கூட தைரியமாக நடித்துள்ள மமிதாவின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் வெளியான டிரைலர் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படம் வெளியாகும் போது மமிதா பைஜூவுக்கு பாராட்டுகள் குவியும் என கூறப்படுகிறது. இதனிடையே, இப்படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ. 60 லட்சம் சம்பளம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் அவரது பயணத்தில் இந்த படம் ஒரு முக்கியமான மைல்கல்லாக அமைக்கும் என்றும், இதன் மூலம் அவருக்கு மேலும் பெரிய வாய்ப்புகள் கிடைக்கும் என்றும் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 பராசக்தி மீது சென்சார் கத்தி: முக்கிய அரசியல் காட்சிகள் வெட்டு

More in Cinema News

To Top