Connect with us

இளசுகளின் கவனத்தை ஈர்க்கும் லவ்வர் படத்தின் மூன்றாவது பாடல் – நீங்களும் கேட்டு பாருங்க..!!

Cinema News

இளசுகளின் கவனத்தை ஈர்க்கும் லவ்வர் படத்தின் மூன்றாவது பாடல் – நீங்களும் கேட்டு பாருங்க..!!

மணிகண்டனின் ரொமான்டிக்கான நடிப்பில் உருவாகி உள்ள ‘LOVER’ திரைப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் வெளியாகி இளசுகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது .

தமிழ் சினிமாவில் ஜெய் பீம் என்ற படத்தின் மூலம் சினிமா ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் தான் நடிகர் மணிகண்டன் .

ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த மணிகண்டன் குட் நைட் என்ற சூப்பர் ஹிட் படத்தின் மூலம் கதாநாயகனாக களமிறங்கி தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகராக வலம் வருகிறார் .

இந்நிலையில் இவரது நடிப்பில் பிரபு ராம் இயக்கத்தில் செம ரொமாண்டிக்காக உருவாகி உள்ள திரைப்படம் ‘LOVER’ . இப்படத்தில் மணிகண்டனுடன் சேர்ந்து கௌரி ப்ரியா, கண்ணா ரவி உள்ளிட்ட பல இளம் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டீசர் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இப்படத்தின் பாடல்கள் ஒவ்வன்றக வெளியாகி வருகிறது .

அதன்படி,இப்படத்தின் மூன்றாவது சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி இளசுகளின் மனத்தில் நீக்காமல் ஒலித்துக்கொண்டே இருக்கிறது .

இதோ அந்த பாடலை நீங்களும் கேட்டு எப்படி இருக்குனு சொல்லுங்க..

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 “Negativity எல்லை மீறினால் Block!” – சமந்தாவின் திறந்த மனசு பேச்சு

More in Cinema News

To Top