Connect with us

“Loki கதாபாத்திரத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்க வேண்டும்! Hollywood நடிகர் டாம் ஹிடில்ஸ்டன் கருத்து!”

Cinema News

“Loki கதாபாத்திரத்தில் நடிகர் ஷாருக்கான் நடிக்க வேண்டும்! Hollywood நடிகர் டாம் ஹிடில்ஸ்டன் கருத்து!”

மார்வெல் தயாரிப்பில் டிஸ்னி+ஹாட்ஸ்டார் தளத்தில் வெளியான வெப்தொடர் ‘Loki’. இத்தொடரின் இரண்டாவது சீசன் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இதில் லோகி கதாபாத்திரத்தில் டாம் ஹிடில்ஸ்டன் நடித்துள்ளார். 6 எபிசோட்களைக் கொண்ட இத்தொடர் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.

இந்த நிலையில், இந்தி ஊடகம் ஒன்றுக்கு டாம் ஹிடில்ஸ்டன் சமீபத்தில் ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் ஷாருக்கான் குறித்து அவர் பேசியுள்ளார். அப்பேட்டியில் அவர் கூறியதாவது, ‘லோகி’ கதாபாத்திரத்தின் பாலிவுட் வெர்சனில் ஷாருக்கான் நடிக்க வேண்டும். அவர் அந்த பாத்திரத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று நினைக்கிறேன்.

லண்டனில் பல ஆண்டுகளுக்கு முன்பு ‘தேவ்தாஸ்’ திரைப்படம் பார்த்தேன். அது மிகவும் அற்புதமான அனுபவமாக இருந்தது. அது போன்ற ஒரு படத்தை அதற்கு முன்பு நான் பார்த்ததில்லை. அது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது” இவ்வாறு டாம் ஹிடில்ஸ்டன் தெரிவித்தார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top