Connect with us

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஹீரோ – சம்பள விவரம் கேட்டு ரசிகர்கள் ஷாக்!

Lokesh-Kanagaraj

Cinema News

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் ஹீரோ – சம்பள விவரம் கேட்டு ரசிகர்கள் ஷாக்!

கூலி’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் லோகேஷ் அடுத்த படத்தை அறிவிப்பாரா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். அதற்கிடையில், கடந்த நவம்பர் 1 அன்று அவர் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ‘டிசி (DC)’ என்ற பெயரில், லோகேஷ் தற்போது நடிகராக அறிமுகமாகவிருக்கிறார்.

இந்த படத்தில் நடிகை வாமிகா கபி ஹீரோயினாக இணைந்துள்ளார். ஆக்ஷனும் காதலும் கலந்த கதையாக உருவாகும் இப்படம், ஒரு டைட்டில் டீசர் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிமுகமானது. அதில், லோகேஷ் ‘தேவதாஸ்’ என்ற கதாபாத்திரத்தில், கத்தியை ஏந்தியபடி, எதிரிகளின் ரத்தத்தில் நனைந்த கொடூரமான தோற்றத்துடன் தோன்றுகிறார்.

வாமிகா கபி ‘சந்திரா’ என்கிற பாத்திரத்தில், தேவதாஸின் காதலியாக காட்சியளிக்கிறார். டீசரில் அவர்கள் நடந்து செல்லும் ஹால்வேயின் நிற அமைப்பும் வடிவமைப்பும், வோங் கார்-வாய் இயக்கிய ‘In the Mood for Love’ படத்துக்கான மரியாதையாக இருக்குமோ என்ற ஆர்வத்தை ரசிகர்களில் கிளப்பியுள்ளது.

படத்தின் கதை விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. ஆனால், இசை அனிருத் ரவிச்சந்தர், ஒளிப்பதிவு முகேஷ் ஜி, எடிட்டிங் ஜி.கே. பிரசன்னா, தயாரிப்பு Sun Pictures என லோகேஷின் வழக்கமான டீம் ஒன்றாக இணைந்துள்ளது. இப்படம் 2026 கோடைக்காலத்தில் திரைக்கு வர வாய்ப்புள்ளது.

இந்நிலையில், இந்த படத்திற்காக லோகேஷ் பெறும் சம்பளம் குறித்த செய்தி கோலிவுட் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. சிலர் இது ‘கூலி’ படத்திற்கான காம்பன்சேஷன் ப்ராஜெக்ட் என்றாலும், தகவல்கள் படி Sun Pictures இந்த படத்துக்கே ₹35 கோடி சம்பளமாக வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.

என்னதான் அருண் மாதேஸ்வரன் இயக்கினாலும், தனது நடிகர் அறிமுகத்தை தரமான ஒரு படமாக்குவதற்காக லோகேஷ் கனகராஜ் முழுமையாக ஈடுபடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பிடத்தக்கது என்னவென்றால், ‘கூலி’ படத்துக்கான இயக்குநர் சம்பளமாக அவர் ₹50 கோடி பெற்றதாக தகவல்கள் கூறுகின்றன.

அதனால், ‘டிசி’யின் தயாரிப்பு செலவு மற்றும் லோகேஷின் சம்பளத்தை இணைத்து பார்க்கும்போது, சுமார் ₹100 கோடி மதிப்பில் உருவாகும் இந்த படம், வெளியீக்குப் பிறகு வசூலில் அதனை மிஞ்ச வேண்டிய கட்டாயம் உருவாகும் என்பது ரசிகர்களிடையே பேசப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ‘இட்லி கடை’க்குப் பிறகு ‘தேரே இஷ்க் மே’ – புதிய அத்தியாயம் தொடங்கும் தனுஷ்!

More in Cinema News

To Top