Connect with us

வாழ்க்கை நிற்காது.. ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் புதிய பாதை

robo shankar

Cinema News

வாழ்க்கை நிற்காது.. ரோபோ சங்கர் மனைவி பிரியங்காவின் புதிய பாதை

Robo Shanka’s wife priyanka: சிறந்த நகைச்சுவை நடிகராக திகழ்ந்த ரோபோ சங்கர், தனது தனித்துவமான நடிப்பு பாணியால் தமிழ் ரசிகர்களின் இதயத்தில் இடம்பிடித்தவர். ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞராக தொலைக்காட்சியில் அறிமுகமான அவர், தனது டைமிங் சென்ஸ் மற்றும் காமெடி டெலிவரி மூலம் சிறப்பாக திகழ்ந்தார்.

அவரது திறமையை கவனித்த தனுஷ், ‘மாரி’ படத்தின் வாயிலாக அவரை பெரிய திரைக்கு அறிமுகப்படுத்தினார். அந்த படத்தில் “சனிக்கிழமை” என்ற கதாபாத்திரத்தில் நடித்த அவர் ரசிகர்களிடையே ஒரு தனி அடையாளத்தைப் பெற்றார். பின்னர் ‘வேலைக்காரன்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘தேசிங்கு ராஜா’, ‘விஸ்வாசம்’ போன்ற பல வெற்றி படங்களில் தன் காமெடி, உணர்ச்சி, தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தார்.

தனது வாழ்க்கையில் நடன கலைஞரான பிரியங்காவுடன் காதலித்து திருமணம் செய்து கொண்டார் ரோபோ சங்கர். அவர்களுக்கு இந்திரஜா என்ற மகளும் உள்ளார். தந்தையைப் போலவே இந்திரஜாவும் திரைத்துறையில் தன்னை நிலைநிறுத்திக்கொண்டு வருகிறார்.

ஒரு கட்டத்தில் ரோபோ சங்கரின் உடல்நலம் பாதிக்கப்பட்டது. குடிப்பழக்கம் காரணமாக ஏற்பட்ட சிக்கலால் அவர் பலமுறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் குடும்பம், நண்பர்கள் அனைவரின் அன்பு மற்றும் ஆதரவால் அவர் மீண்டு வந்து, வாழ்க்கையை மாற்றியவர் என்றே சொல்லலாம். அதன் பிறகு அவர் திரைத்துறையில் மீண்டும் சீரிய, சிந்தனையுள்ள மனிதராக திகழ்ந்து, பல படங்களில் நடித்தார்.

குடும்பம் முழுவதும் மகிழ்ச்சியில் இருந்தபோது, திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவு அவரது உயிரை பறித்தது. கடந்த மாதம் அவரது மறைவுச் செய்தி திரைத்துறையையே உலுக்கியது. இறுதி ஊர்வலத்தின் போது மனைவி பிரியங்கா அழுதபடியே கணவரின் நினைவில் நடனமாடிய காட்சி, அனைவரின் இதயத்தையும் நொறுக்கியது.

இந்நிலையில், தன் நெஞ்சில் உள்ள ஆழ்ந்த வலியை மறைத்து, பிரியங்கா தனது வாழ்க்கையை புதிய திசையில் முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறார். அவர் தற்போது ‘ருசி நேரம்’ என்ற புதிய சமையல் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளினி அர்ச்சனா தொகுத்து வழங்குகிறார். இதில் பிரியங்கா தனது சமையல் திறமையை, வாழ்க்கை அனுபவங்களையும், மன உறுதியையும் ரசிகர்களுடன் பகிரவிருக்கிறார். நிகழ்ச்சியின் ப்ரோமோ வீடியோ ஏற்கனவே வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  திரையரங்கில் குறைந்த வரவேற்பு, OTT-யில் பெரும் வரவேற்பு — சக்தி திருமகன் சாதனை

More in Cinema News

To Top