Connect with us

“தளபதி 68 படத்தின் Title இதுதானா?! அதிரடியாக Title வைக்கிறேன்னு இப்படியா?!”

Cinema News

“தளபதி 68 படத்தின் Title இதுதானா?! அதிரடியாக Title வைக்கிறேன்னு இப்படியா?!”

விஜய் – வெங்கட் பிரபு கூட்டணி முதன்முறையாக தளபதி 68 படத்தில் இணைந்துள்ளது. யாருமே எதிர்பார்க்காத நேரத்தில் தளபதி 68 படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு என விஜய் அறிவித்திருந்தார். முதலில் அதிர்ச்சியான ரசிகர்கள், இப்போது தளபதி 68 படத்தை அதிகம் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 68 ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது.

தற்போது ஹைதராபாத்தில் நடைபெறும் தளபதி 68 படத்தின் ஷூட்டிங்கில் விஜய், சினேகா உள்ளிட்ட மேலும் சிலரும் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் சமீபத்தில் கிச்சா சுதீப், கஞ்சா கருப்பு ஆகியோரும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். அப்பா, மகன் என விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கும் தளபதி 68, ஹாலிவுட் படமான ஜெமினி மேன் காப்பி என சொல்லப்படுகிறது.

சயின்ஸ் பிக்‌ஷன் ஜானரில் தரமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே தளபதி 68 படத்தின் டைட்டில் பாஸ் அல்லது Puzzle என ஒரு தகவல் வைரலானது. இதனையடுத்து இந்த சர்ச்சைக்கு விளக்கம் கொடுத்த தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, டைட்டில் பாஸ் இல்லை எனவும் மறுப்புத் தெரிவித்திருந்தார். ஆனாலும் தளபதி 68 டைட்டில் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன.

அதன்படி, தளபதி 68 டைட்டில் ‘தலைவன்’ என்றிருக்கலாம் என பிரபல சினிமா செய்தியாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார். பாஸ் என்பதன் தமிழ் அர்த்தமாக தலைவன் என டைட்டில் வைக்கப்படலாம் என கூறியிருந்தார். அதேநேரம் இன்னொரு தகவலும் தற்போது கிடைத்துள்ளது. அதனை வைத்து பார்க்கும் போது, தளபதி 68 டைட்டில் கோட் (Goat) என சொல்லப்படுகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top