Connect with us

பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஸ்க்கு பரிசுத்தொகை அறிவித்தது கேரள அரசு..!!

Cinema News

பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஸ்க்கு பரிசுத்தொகை அறிவித்தது கேரள அரசு..!!

பாரிஸ் ஒலிம்பிக்கில் சிறப்பாக செய்யப்பட்டு வெண்கல பதக்கம் வெல்ல முக்கிய காரணமாக இருந்த இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பி.ஆர்.ஸ்ரீஜேஸ்க்கு கேரள அரசு பரிசுத்தொகை அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒலிம்பிக் விளையாட்டு தொடர் பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் கோலாகலமாக தொடங்கி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் பரபரப்பாக நடைபெற்று வந்த ஒலிம்பிக் தொடரில் ஆடவர் ஹாக்கி இறுதி போட்டியில் . இந்தியா – ஸ்பெயின் அணிகள் மோதியது.

அனல் பறக்க நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய இந்திய அணி 2-1 என்ற புள்ளிக்கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன் வெண்கலப் பதக்கத்தையும் வென்று அசத்தியது .

இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்ட இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். மேலும் இந்த ஒலிம்பிக் போட்டியுடன் ஸ்ரீஜேஷ் தனது ஓய்வு செய்தியையும் அறிவித்தார்.

இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலப்பதக்கம் வென்ற இந்திய அணியின் கோல் கீப்பராக செயல்பட்ட கேரளாவை சேர்ந்த பி.ஆர்.ஸ்ரீஜேஸ்க்கு, 2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளார் அம்மாநில முதலமைச்சர் பினராயி விஜயன்

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ரக்ஷன் புதிய படம் 🎉 “மொய் விருந்து” First Look Viral!

More in Cinema News

To Top