Connect with us

கரூர் சிக்கல்: தினமும் முடிச்சுகளை அவிழ்க்கும் திமுக – விஜய்க்கு அதிகரிக்கும் அழுத்தம்!

Politics

கரூர் சிக்கல்: தினமும் முடிச்சுகளை அவிழ்க்கும் திமுக – விஜய்க்கு அதிகரிக்கும் அழுத்தம்!

கரூர் சம்பவத்தைச் சுற்றி தினமும் புதிய ஆதாரங்களை வெளியிட்டு திமுக, தவெக தலைவர் விஜயை சிக்கவைக்கிறது. 2 நாட்களுக்கு முன்பு ஐஏஎஸ் அதிகாரி அமுதா விளக்கம் அளித்ததையடுத்து, மறுநாளில் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை நேரடியாக சந்தித்து பதிலளித்தார். அதே நேரத்தில், செருப்பு வீசிய இளைஞரின் வீடியோ வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தியது.

கரூரில் விஜய் நடத்திய பிரசாரக் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்காக இதுவரை விஜய் எந்தவொரு வருத்தமும் தெரிவிக்காததோடு, பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சென்று சந்தித்தும் ஆறுதல் கூறவில்லை என்பது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது. மேலும், தவெக நிர்வாகிகள் பலர் தலைமறைவாக இருப்பதும் அந்தக் கட்சியினரையே குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விவகாரத்திற்கு திமுக தான் காரணம் என்ற கருத்து சமூக வலைதளங்களில் பரவலாகப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதையடுத்து, “முதல்வர் பழிவாங்க நினைத்தால் என்மீது நடவடிக்கை எடுக்கட்டும்” என்று விஜய் சவால் விடுத்தார். ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தவெக சார்பில் இரங்கல் கூட்டம்கூட நடத்தப்படவில்லை என்பதும் சாடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், ஆம்புலன்ஸ் ஏன் தாமதமாக வந்தது?, போலீசார் எடுத்த நடவடிக்கைகள் என்ன? என்பவற்றை குறித்து சுகாதாரத்துறை செயலரும், ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதமும் விளக்கம் அளித்தனர். பின்னர், தவெக சார்பில் செந்தில் பாலாஜி மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையில், அவர் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து செருப்பு வீச்சு சம்பவம் உட்பட அனைத்துக்கும் விளக்கம் கொடுத்தார்.


மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  புதிய தலைமுறை சேனல் முடக்கம்: “கருத்துச் சுதந்திரம் காப்பாற்றப்படுகிறதா, முதல்வரே?”

More in Politics

To Top