Connect with us

அதிமுக மேடையில் தவெகக் கொடி ஏன்? 😮 கருணாஸ் சொன்ன அதிரடி விளக்கம் – அரசியல் பின்னணி வெளிச்சம்!

Politics

அதிமுக மேடையில் தவெகக் கொடி ஏன்? 😮 கருணாஸ் சொன்ன அதிரடி விளக்கம் – அரசியல் பின்னணி வெளிச்சம்!

முக்குலத்தோர் புலிப்படை கட்சித் தலைவர் மற்றும் நடிகர் கருணாஸ், சமீபத்தில் விஜயின் தவெக கூட்டம் மற்றும் அதிமுக அரசியல் நிலைப்பாட்டை பற்றிய கூர்மையான கருத்துகளை வெளிப்படுத்தியுள்ளார். சென்னை ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், கருணாஸ் முதலில் கரூர் நிகழ்வை நினைவூட்டினார். கடந்த மாதம் 27ஆம் தேதி கரூர் வேலுசாமிபுரத்தில் நடைபெற்ற தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலால் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரமான சம்பவத்துக்குப் பிறகும் விஜய் அந்த இடத்துக்குச் செல்லவில்லை என்பது குறித்து கருணாஸ் கேள்வி எழுப்பினார்.

அவர் கூறியதாவது: “மக்களுக்கு ஒரு இடையூறு, கஷ்டம் ஏற்பட்டால், ‘உங்களில் ஒருவனாக நான் இருக்கிறேன்’ என்று சொல்லக்கூடியவர்தான் ஒரு உண்மையான தலைவர். ஆனால் பனையூர் வீட்டின் கேட் உள்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கிறதா அல்லது வெளிப்பக்கமாக பூட்டப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் தான் பார்க்க வேண்டும். மக்களுக்காக அரசியல் செய்வது என்றால், மக்கள் துயரத்தில் இருக்கும்போது அவர்களுடன் நின்று அவர்களுக்கு துணை நிற்க வேண்டும். அப்படிச் செய்யத் தவறுபவர்கள் மீது மக்கள் தான் தீர்ப்பளிப்பார்கள்,” என்றார்.

அவர் மேலும் கூறுகையில், “நள்ளிரவு நேரத்திலும் மக்களுக்காக அங்கு சென்று உதவியவர் முதலமைச்சர் ஸ்டாலின். அதுதான் ஒரு தலைவரின் பண்பு. உண்மையான தளபதி என்பது மக்களோடு இணைந்திருப்பதால்தான் நிரூபிக்கப்படுகிறது, சொல்லுவதால் அல்ல” என்று தெரிவித்தார்.

பாஜக குறித்து பேசும் போது, கருணாஸ் சாடல் குரலில் கூறினார்: “பாஜக என்றைக்கும் நேரடியாக வராது. பின்னணியில் நின்று சிந்துவை பாடி, பாட்டை கம்போஸ் பண்ணும் மாதிரி செய்கிறது. அந்த பாட்டுக்கு நடனமாட ஒரு நடிகரை இப்போ கண்டுபிடிச்சிருக்காங்க — அல்மோஸ்ட் பாடல் ரெடி!” எனச் சிரித்தார். அதிமுக மீதும் கடுமையாக விமர்சனம் செய்த அவர், “எம்ஜிஆர் உருவாக்கி, ஜெயலலிதா பாதுகாத்த அதிமுக, இப்போது எடப்பாடி பழனிசாமியின் சுயநல அரசியலால் திசைதிரிந்திருக்கிறது. தங்களது கொடியை விட, பிறரின் கொடியை ஏந்தும் நிலைமை வந்துவிட்டது என்பது அதிமுக தொண்டர்களுக்கே அவமானம். எடப்பாடி பதவிக்காக கட்சியை கூட அடகு வைப்பார் என்பது இப்போது உறுதி ஆகியுள்ளது,” என்று கடுமையாக கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “Addiction இருந்து மீண்டார் 💔➡️💫 சாய் பல்லவி தான் காரணம்!”

More in Politics

To Top