Connect with us

“ஜிகர்தண்டா Double X பட ஷூட்டிங்கின்போது அந்த காட்சியில் நடந்த உண்மை சம்பவம்..! அசந்துபோன இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!”

Cinema News

“ஜிகர்தண்டா Double X பட ஷூட்டிங்கின்போது அந்த காட்சியில் நடந்த உண்மை சம்பவம்..! அசந்துபோன இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!”

ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் இத்திரைப்படம் குறித்து நடிகர் கார்த்திக் சுப்புராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், ஜிகர்தண்டா இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்கு வந்தபோது, ஜிகர்தண்டா முதல் பாகத்தோட கனெக்ட் பண்ணி எடுக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றவில்லை. ஆனால் ஜிகர்தண்டா பார்ட் ஒன்ல, சேதுவின் அப்பா மில் விபத்தில் இறந்துவிட்டார் என்று ஒரு வசனம் வைத்து இருப்பேன்.

F-d9IxDbcAAjWkK

அது தான் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் மையக்கரு, சேதுவின் அப்பா ஒரு பெரிய காரணத்திற்காக கொல்லப்படுகிறார் அது என்ன என்பதுதான் இப்படத்தின் கதை. மேலும், சினிமா என்பது எனக்கு ரொம்ப பிடித்தமான ஒன்று, சினிமாவை நாம் நேசிக்கவில்லை என்றால், அது நம்மை விட்டு சென்று விடும் என்பதை நான் நம்புகிறேன். இதனால் தான் நான் ஜிகர்தண்டா பார்ட் ஒன்றில் ஒரு பெட்டிக்கடை வசனம் வைத்து இருப்பேன். அதில், வாய்ப்பு என்பது ஒரு தேவதை மாதிரி நீ அதை மதித்தால் அது மீண்டும் மீண்டும் வரும் என்று இருக்கும்.

அது மாதிரி தான் சினிமாவும், சினிமாவும் ஒரு தேவதை மாதிரி அதை நீங்கள் மதித்து அதை நீங்கள் காதலித்தால் அது உங்கள் கூடவே இருக்கும். நீங்கள் என்னதான் எழுதிக் கொண்டு போனாலும் சில விஷயங்கள் நடப்பது என்பது நம் கையிலே கிடையாது. ஒரு உதாரணமாக ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் ஒரு யானை சீன் இருக்கும். அந்த காட்சியில் யானை உண்மையில் எமோஷனலாக நடித்திருக்கும். அதை யாரும் சொல்லிக் கொடுக்கவில்லை. அது என்னுடைய திறமையும் இல்லை.

அதற்கு நான் யார் என்று தெரியாது, இவர் இயக்குநர் என்று தெரியாது, இவர் படத்தில் நடிக்கிறோம் என்று எல்லாம் தெரியாது. நடிகர்களுக்கு தேதி ஒதுக்குவது போல அந்த யானைக்கும் நேரத்தை ஒதுக்கி எடுத்தோம். ஆனால், அந்த காட்சியில் யானை ஒன்று செய்தது. அது தான் சினிமா எனக்கு ஏதோ சொல்ல வருகிறது,ஏதோ ஒன்றை கொடுக்கிறது என்று நினைத்தேன் என்று அந்த பேட்டியில் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top