Connect with us

“திரையரங்குகளில் Mass காட்டிவரும் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா Double X படத்தின் வசூல் இத்தனை கோடியா?!”

Cinema News

“திரையரங்குகளில் Mass காட்டிவரும் கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா Double X படத்தின் வசூல் இத்தனை கோடியா?!”

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் SJ சூர்யா, ராகவா லாரன்ஸ் நடித்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது. கார்த்தியின் ஜப்பான் படத்துடன் மோதிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், பாசிட்டிவான விமர்சனங்களுடன் இந்தாண்டு தீபாவளி வின்னராகியுள்ளது. கடந்த வாரம் 10ம் தேதி வெளியான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ஒரு வாரம் கடந்தும் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

அதேநேரம் கார்த்தியின் ஜப்பான் வெளியான தடமே தெரியாமல் தோல்வியைத் தழுவியது. இதனால் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்துக்கும் மேலும் அதிக வரவேற்பு கிடைத்தது. கேங்ஸ்டர் ஜானரை பின்னணியாக வைத்து 1975ல் நடக்கும் பீரியட் படமாக உருவான ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைந்தது. இதனால் பாக்ஸ் ஆபிஸிலும் இந்தப் படத்துக்கு சூப்பர் கலெக்‌ஷன் கிடைத்தது.

அதன்படி, முதல் நாளில் 5 கோடி ரூபாய் வரை வசூலித்தது. அடுத்தடுத்த நாட்களிலும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் வசூல் மாஸ் காட்டியது. இரண்டாவது, மூன்றாவது நாட்களிலும் தலா 7 கோடி ரூபாய் வரை வசூலித்தது. இந்நிலையில், தீபாவளி விடுமுறைக்குப் பின்னரும் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் கலெக்‌ஷன் குறையவில்லை என சொல்லப்படுகிறது.

முதல் வாரம் முடிவில் தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் 32 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாம். அதேபோல் இந்தியா தவிர மற்ற நாடுகளில் 13 கோடி வரை கலெக்‌ஷன் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் உலகம் முழுவதும் மொத்தமாக இதுவரை 45 கோடி ரூபாய் கலெக்‌ஷன் செய்துள்ளது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இதே நிலை தொடர்ந்தால், இன்னும் இரண்டே தினங்களில் 50 கோடி ரூபாய் வசூலை கடந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top