Connect with us

ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு கோரிக்கை… ஜாய் கிரிஸில்டாவின் புதிய புகார்

madhampatti

Cinema News

ஜாமீனில் வெளிவர முடியாத வழக்கு கோரிக்கை… ஜாய் கிரிஸில்டாவின் புதிய புகார்

ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டா, மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து கொண்டு, கருவுற்ற நிலையில் தன்னிடமிருந்து விலகியதாக ஏற்கனவே காவல்நிலையம் மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் நடந்த விசாரணையில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு மகளிர் ஆணையம் பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து, ரங்கராஜ் தன்னை திருமணம் செய்ததாகவும், குழந்தை தன்னுடையதே என்றும் ஏற்றுக்கொண்டதாக ஜாய் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். ஆனால் இதை மறுத்த ரங்கராஜ், திருமணத்தை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை என்றும், குழந்தைக்கு டிஎன்ஏ சோதனை நடத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.

madhampatti
madhampatti

இந்நிலையில், பல மாதங்கள் கடந்தும் டிஎன்ஏ சோதனைக்கு ரங்கராஜ் முன்வரவில்லை என ஜாய் கிரிஸில்டா குற்றம் சாட்டி வந்தார். தொடர்ந்து சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்ட குற்றச்சாட்டுகளுக்கு ரங்கராஜ் தரப்பில் இருந்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.

தற்போது மீண்டும், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஜாய் கிரிஸில்டா புதிய புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த மனுவில், மாதம்பட்டி ரங்கராஜ் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்றும், பிப்ரவரி மாதத்தில் தனது வீட்டு ஒப்பந்தம் முடிவடைய உள்ளதால், இரண்டு குழந்தைகளின் பராமரிப்பிற்காக உடனடி நடவடிக்கை தேவைப்படுவதாகவும், இந்த வழக்கை விரைந்து விசாரித்து நீதியான தீர்வு வழங்க போலீசார் உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  கீர்த்தி சுரேஷ் – திருமண வாழ்க்கையின் முதல் ஆண்டு கொண்டாட்டம் 💖

More in Cinema News

To Top