Connect with us

ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்த மனு, ரங்கராஜுக்கு 6.5 லட்சம் மாதக் கட்டணம்

madhampatti

Cinema News

ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்த மனு, ரங்கராஜுக்கு 6.5 லட்சம் மாதக் கட்டணம்

Madhampatti Rangaraj: ஜாய் கிரிஸில்டா சமீபத்தில் நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், நான் தற்போது ஏழு மாத கர்ப்பிணியாக இருக்கிறேன். கர்ப்பத்தினால் வேலை செய்ய முடியவில்லை. எனவே மருத்துவ செலவுகள், வீட்டு வாடகை மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக மாதந்தோறும் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க ரங்கராஜ் மீது உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது என தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் மற்றும் சமையல் கலைஞரான மாதம்பட்டி ரங்கராஜ், வழக்கறிஞர் ஸ்ருதியைத் திருமணம் செய்து இரண்டு குழந்தைகளின் தந்தையாக உள்ளார். ஆனால் பின்னர் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிஸில்டாவுடன் அவருக்கு ஏற்பட்ட நெருக்கம் காதலாக மாறி, திருமணத்திலும் முடிந்ததாக செய்திகள் வெளியாகின.

விவாகரத்து செய்யாமலேயே இரண்டாவது திருமணம் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. திருமண புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவியதால் கடும் விமர்சனங்கள் எழுந்தன.

madhampatti
madhampatti

ஜாய் கிரிஸில்டாவின் புகார்

ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து, பின்னர் விலகி விட்டதாக கூறி ஜாய் கிரிஸில்டா சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். மேலும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை “X” (முன்னாள் ட்விட்டர்) பக்கத்தில் Tag செய்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மகளிர் ஆணைய விசாரணை

இந்த வழக்கு தொடர்பாக இருவரும் சமீபத்தில் மகளிர் ஆணையத்தில் ஆஜரானார்கள். அப்போது ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் வந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. ஸ்ருதி ஒரு வழக்கறிஞர் என்பது குறிப்பிடத்தக்கது. விசாரணையில் பல கேள்விகள் எழுப்பப்பட்டதாகவும், ரங்கராஜ் தன்னுடன் நேரில் பேசியதாகவும் ஜாய் கிரிஸில்டா ஊடகங்களிடம் தெரிவித்தார்.

ரங்கராஜின் அறிக்கை

விவகாரம் குறித்து நீண்டநாள் மௌனமாக இருந்த ரங்கராஜ் பின்னர் எழுத்து மூலம் விளக்கம் வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்தார்: ஜாய் கிரிஸில்டா எழுப்பிய சர்ச்சை தொடர்பாக பலர் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். எனக்கு நீதித்துறையின் மீது முழு நம்பிக்கை உள்ளது. சட்டப்படி உண்மை நிரூபிக்கப்படும். நான் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளேன். இதை நீதிமன்றத்துக்கு வெளியே தீர்க்க ஒப்புக்கொள்ள மாட்டேன்.

ஊடகங்கள் இந்த விவகாரம் குறித்து யூகங்களோ அல்லது கருத்துக்களோ வெளியிடாமல் இருக்க வேண்டுமென பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.”

அடுத்த கட்டம்

இப்போது ஜாய் கிரிஸில்டா தாக்கல் செய்துள்ள பராமரிப்பு மனு குறித்து நீதிமன்றம் விரைவில் விசாரணை நடத்தவுள்ளது.

See also  வெங்கட் பிரபுவின் டைம் டிராவல் உலகில் சிவகார்த்திகேயன்! ரசிகர்கள் பரவசம்!

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top