Connect with us

ஜெயம்ரவி நடிக்கும் சைரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

Cinema News

ஜெயம்ரவி நடிக்கும் சைரன் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!!

ஜெயம்ரவியின் மாறுபட்ட நடிப்பில் உருவாகி உள்ள சைரன் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது .

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் ஜெயம் ரவி.

புது விதமான கதைகளையும் பல வித்தியாசமான கதாபாத்திங்களையும் விரும்பி ஏற்று நடிக்கும் இவரது படங்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்துள்ளன .

உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருக்கும் இவரது நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திறம்படம் தான் “சைரன்” .

பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை இரும்புத்திரை, விஸ்வாசம், ஹீரோ உள்ளிட்ட படங்களில் எழுத்துப் பணியில் பங்காற்றிய ஆண்டனி பாக்யராஜ், இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

மிகப்பிரமாண்ட பொருட்செலவில் தயாராகி வரும் இப்படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்க இவர்களுடன் பல இளம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர் .

இந்நிலையில் இப்படம் குறித்த அடுத்தகட்ட அப்டேட் கேட்டு ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்த நிலையில் தற்போது இப்படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படைக்கல வெளியிட்டுள்ளது.

அந்த அப்டேட் என்னவென்றால் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகும் சைரன் திரைப்படம் வரும் பிப்ரவரி மாதம் 16-ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது .

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மகளின் மனநிலை பாதிக்குமோ? விவாகரத்து வதந்திகள் குறித்து அபிஷேக் பச்சனின் தந்தை மனக்கவலை ❤️

More in Cinema News

To Top