Connect with us

“ICC: பேட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலி முன்னேற்றம்!”

Cinema News

“ICC: பேட்டிங் தரவரிசை பட்டியலில் விராட் கோலி முன்னேற்றம்!”

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டி பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. இதில் சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் 3 சதங்களுடன் 765 ரன்கள் குவித்த இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி 791 புள்ளிகளுடன் ஓர் இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார்.

ஷுப்மன் கில் 826 ரேட்டிங் புள்ளிகளுடன் முதலிடத்தில் தொடர்கிறார். பாகிஸ்தான் அணியின் பாபர் அஸம் 824 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓர் இடம் முன்னேறி 4-வது இடத்தை அடைந்துள்ளார். உலகக் கோப்பை தொடரில் ரோஹித் சர்மா 597 ரன்கள் குவித்திருந்தார்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் சதம் விளாசி ஆட்ட நாயகன் விருது வென்ற ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 28 இடங்கள் முன்னேறி 15-வது இடத்தை பிடித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் குவிண்டன் டி காக் 2 இடங்கள் பின்தங்கி 5-வது இடத்தில் உள்ளார்.

உலகக் கோப்பை தொடரில் 552 ரன்கள் குவித்த நியூஸிலாந்தின் டேரில் மிட்செல் 5 இடங்கள் முன்னேறி 6-வது இடத்தை அடைந்துள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் தென் ஆப்பிரிக்காவின் கேசவ் மகாராஜ் முதலிடத்தில் தொடர்கிறார்.

ஆஸ்திரேலியாவின் ஜோஷ் ஹேசில்வுட் 4 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் முகமது சிராஜ் 3-வது இடத்திலும், ஜஸ்பிரீத் பும்ரா 4-வது இடத்திலும் தொடர்கின்றனர். குல்தீப் யாதவ் ஒரு இடத்தை இழந்து 6-வது இடத்தில் உள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்கள் குப்பைகள், விளாசிய சீரியல் நடிகை

More in Cinema News

To Top