Connect with us

தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் கொடுத்த இளையராஜா – என்ன மேட்டர்னு தெரியுமா..?

Cinema News

தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் கொடுத்த இளையராஜா – என்ன மேட்டர்னு தெரியுமா..?

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத்தின் ஸ்டுடியோவுக்கு இசைஞானி இளையராஜா வந்துள்ள வீடியோ மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் செம வைராலகி வருகிறது.

தென்னிந்திய திரையுலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் தேவி ஸ்ரீ பிரசாத் சூர்யா விஜய் அஜித் என உச்ச நட்சத்திரங்கள் பலருக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்துள்ளார்.

இதுமட்டுமின்றி தெலுங்கு சினிமாவில் இவரது இசைக்கு ஆட்டம் போடாத கால்களே கிடையாது என்றும் கூறப்படுகிறது. தனது இசையாலும் குரலாலும் எண்ணற்ற ரசிகர்களை சம்பாதித்து வைத்துள்ள தேவி ஸ்ரீ பிரசாத் இசைஞானி இளையராஜாவின் தீவிர ரசிகராம்.

தனது ஸ்டுடியோவுக்கு இளையராஜா ஒரு முறையாவது வரவேண்டும் என தேவி ஸ்ரீ பிரசாத் அவர்களின் ஆசை இன்று நிறைவேறி உள்ளது.

அட ஆம் மக்களே இசைஞானி இளையராஜா தேவி ஸ்ரீ பிரசாத் ஸ்டுடியோவுக்கு திடீர் விசிட் கொடுத்து DSP அவர்களுக்கு தரமான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

இந்நிகழ்வு குறித்து நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ள இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் கூறிருப்பதாவது :

“இளையராஜா ஒரு நாள் எனது ஸ்டுடிவுக்கு வர வேண்டும். அவருடைய படத்துக்கு அருகில் நின்று அவருடன் புகைப்படம் எடுக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு. அது நிறைவேறியுள்ளது.

என்னுடைய இசைக் கடவுளுக்கு நன்றி” என இளையராஜாவுடனான சந்திப்பு குறித்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  உண்மை தான்! ‘ஜனநாயகன்’ படத்தில் லோகேஷ் கனகராஜ் கேமியோ 🔥

More in Cinema News

To Top