Connect with us

“யானை மாதிரி இருந்தேன்” – குஷ்பு சொன்ன அதிர்ச்சி வெயிட் லாஸ் கதை

Cinema News

“யானை மாதிரி இருந்தேன்” – குஷ்பு சொன்ன அதிர்ச்சி வெயிட் லாஸ் கதை

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை குஷ்பு, சமீபத்தில் தனது உடல் எடை குறைந்த மாற்றம் குறித்து திறந்த மனதுடன் பகிர்ந்து கொண்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார். பல ஆண்டுகளாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ள அவர், தற்போது தனது வெயிட் லாஸ் பயணம் குறித்து அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அந்த பேட்டியில் குஷ்பு கூறியதாவது, ரஜினிகாந்த் நடித்த “அண்ணாத்த” திரைப்படத்தின் படப்பிடிப்பு காலத்தில் தனது உடல் எடை சுமார் 98 கிலோ இருந்தது என்றும், அந்த நேரத்தில் தினசரி வாழ்க்கையிலும் பல சிரமங்களை சந்தித்ததாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக மாடிப்படி ஏறி இறங்கும்போது முட்டி வலி, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்பட்டதால், உடல்நலத்தை கவனிக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்ததாக அவர் கூறினார்.

இதையடுத்து, கோவிட் காலத்திலிருந்து உடல் எடையை குறைக்கும் முயற்சியை தொடங்கியதாக குஷ்பு தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக கட்டுப்படுத்தப்பட்ட உணவு முறை, ஒழுங்கான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களை கடைப்பிடித்து தனது உடல் எடையை மெதுவாக குறைத்துள்ளார்.

மேலும், தற்போது 55 வயதானாலும் தன்னுக்கு பிபி, சுகர் போன்ற பெரிய நோய்கள் எதுவும் இல்லை என்றும், ஆரோக்கியமாக இருப்பதே வாழ்க்கையில் மிக முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். குஷ்புவின் இந்த மாற்றம் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்று, சமூக வலைதளங்களில் பலரும் அவரது முயற்சியை பாராட்டி வருகின்றனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  ஒரே காரில்… ஒரே நிற உடையில்… விஜய் – திரிஷா வருகை; வைரலான திருமண நிகழ்ச்சி! 🔥

More in Cinema News

To Top