Connect with us

“எனக்கு மேக்கப் பிடிக்காது” – சாரா அர்ஜுன் பேட்டி வைரல்

Cinema News

“எனக்கு மேக்கப் பிடிக்காது” – சாரா அர்ஜுன் பேட்டி வைரல்

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகைகளில் ஒருவராக சாரா அர்ஜுன் உள்ளார். இயக்குநர் A. L. விஜய் இயக்கத்தில் வெளியான “தெய்வத்திருமகள்” திரைப்படத்தின் மூலம் அவர் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். அந்த படத்தில் தனது இயல்பான நடிப்பால் சிறு வயதிலேயே ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றார்.

இதனைத் தொடர்ந்து “சைவம்” திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேலும் கவனம் பெற்றார். பின்னர் மணிரத்னம் இயக்கிய “பொன்னியின் செல்வன்” திரைப்படத்தில் குட்டி நந்தினி கதாபாத்திரத்தில் நடித்தபோது, “தெய்வத்திருமகள் படத்தில் நடித்த அந்த சிறுமி இவ்வளவு வளர்ந்துவிட்டாளா?” என்று ரசிகர்கள் ஆச்சரியப்படும் அளவிற்கு அவர் மாற்றம் பெற்றிருந்தார்.

இந்நிலையில் சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில், தனது மேக்கப் பற்றிய விருப்பம் குறித்து சாரா அர்ஜுன் மனம் திறந்து பேசியுள்ளார். அதிகமான மேக்கப் பயன்படுத்துவது தனக்கு பிடிக்காது என்றும், இயற்கையான தோற்றமே தான் மிகவும் விரும்பும் அழகு என்றும் தெரிவித்துள்ளார்.

பட விழாக்கள் அல்லது பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது கூட லேசான டச்சப் மட்டுமே செய்து கொள்வேன் என்றும், படப்பிடிப்பில் கதாபாத்திரத்திற்குத் தேவையான அளவுக்கு மட்டுமே மேக்கப் பயன்படுத்துவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

இயற்கையான அழகை விரும்புகிறேன் என்று சாரா அர்ஜுன் கூறிய இந்த கருத்து தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே அதிகமாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  மறுதணிக்கை ரத்து – “ஜனநாயகன்” வெளியீடு எப்போது?

More in Cinema News

To Top