Connect with us

“இந்த இந்திய நாடு சிறந்தவர்களின் கரங்களில் இருக்கிறது! பிரதமர் மோடியை புகழ்ந்த ஹாலிவுட்டின் ஆஸ்கர் நடிகர்!”

Cinema News

“இந்த இந்திய நாடு சிறந்தவர்களின் கரங்களில் இருக்கிறது! பிரதமர் மோடியை புகழ்ந்த ஹாலிவுட்டின் ஆஸ்கர் நடிகர்!”

இந்தியா சிறந்தவர்களின் கைகளில் இருப்பதாக நினைக்கிறேன் என 2 முறை ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நடிகர் புகழாரம் சூட்டியுள்ளார். கோவாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடைபெற்று வரும் நிலையில் இந்த விழாவில் இந்திய திரையுலக பிரபலங்கள் மட்டுமின்றி ஹாலிவுட் பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

அந்த வகையில் 2 ஆஸ்கார் விருது 5 கோல்டன் குளோப் விருது உட்பட பல விருதுகள் பெற்ற ஹாலிவுட் நடிகர் மைக்கேல் டக்ளஸ் பேசினார். அவர் பேசிய போது ’78 நாடுகள் பிரதிநிதித்துவம் கொண்ட இந்த விழா தனித்துவம் மற்றும் அழகாக இருப்பதாக கருதுகிறேன்.

உலக அளவில் உலக அளவில் இந்திய திரைப்படங்களின் தாக்கம், பிரதிபலிப்பு சிறந்ததாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியின் ஆட்சியில் கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்கள் தயாரிப்புக்கு அதிக செலவு பணம் செலவு செய்வதை அறிகிறேன். இது இந்திய திரைப்படங்களுக்கு வெற்றிகரமான காலகட்டம்.

பல்வேறு மொழிகள் பேசும் நாம் சினிமா என்ற ஒரே மொழியின் கீழ் ஒன்றிணைகிறோம். உலகில் எந்த மூலையில் இருந்தாலும் ஒவ்வொரு இடத்திலும் என்ன நடக்கிறது என்பதை திரைப்படங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். எனவே திரைப்படங்கள் நம்மை நெருக்கமாகின்றன. எனவே திரைப்படம் மிகவும் முக்கியம் என்று நான் நினைக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top