Connect with us

ஹன்சிகா மோட்வானி விவாகரத்து! 4 ஆண்டில் முடிந்த திருமணம்

Cinema News

ஹன்சிகா மோட்வானி விவாகரத்து! 4 ஆண்டில் முடிந்த திருமணம்

தமிழ் மற்றும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் ஹன்சிகா மோட்வானி குறித்து தற்போது ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. நடிகை ஹன்சிகா மற்றும் தொழிலதிபர் சோஹேல் கத்தூரியா தங்களது திருமண வாழ்க்கையை சட்டப்படி முடித்துக் கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மும்பை குடும்ப நீதிமன்றம் இருவருக்கும் பரஸ்பர சம்மத விவாகரத்தை வழங்கியதாக கூறப்படுகிறது.



2022ஆம் ஆண்டு ராஜஸ்தானில் மிகவும் பிரம்மாண்டமாக நடைபெற்ற அவர்களின் திருமணம் அப்போது ரசிகர்கள் மற்றும் சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் கடந்த சில காலமாக இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டதாகவும், 2024ஆம் ஆண்டிலிருந்தே அவர்கள் தனித்தனியாக வாழ்ந்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விவாகரத்து உடன்படிக்கையில் ஹன்சிகா எந்தவித ஸ்த்ரீதனம் அல்லது அலிமோனியும் கோரவில்லை என்றும் கூறப்படுகிறது. பரஸ்பர புரிதலுடன் அமைதியாக இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், இருவரும் தங்களது வாழ்க்கையில் புதிய பாதையை தேர்வு செய்து முன்னேற முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி தற்போது திரையுலகிலும் சமூக வலைதளங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🔥 ரன்வீர் சிங் ‘துரந்தர் 2: ரிவெஞ்ச்’ டிரைலர் வெளியீடு… மார்ச் 19 அன்று திரையரங்கில் அதிரடி!

More in Cinema News

To Top