Connect with us

கோலங்கள் ஆதி வருகையால் அல்லல் படப்போகும் குணசேகரன், ஜெயித்த மருமகள்கள்

ethirneechal

Uncategorized

கோலங்கள் ஆதி வருகையால் அல்லல் படப்போகும் குணசேகரன், ஜெயித்த மருமகள்கள்

Ethirneechal 2: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் 2 சீரியலில், ஆணாதிக்க திமிரையும் வறட்டு கௌரவத்தையும் வைத்து பெண்களை ஆட்டிப்படைத்த குணசேகரன் தற்போது துண்ட காணும் துணிய காணும் என்று தலைமறைவாகி போயிருக்கிறார். ஆனால் சக்தி, தன்னிடம் இருந்து ஆதாரத்தை எடுத்துக் கொண்டதால் அதை வைத்து ஏதாவது பண்ணுவான் என்ற பயமும் குணசேகனுக்கு வந்துவிட்டது.

இன்னொரு பக்கம் சக்தி ஜனனி, அந்த கடிதத்தை பார்த்து என்ன பிரச்சனை என்று தெரிந்து கொள்ள முயற்சி எடுக்கிறார்கள். அந்த வகையில் அந்த கடிதத்தில் எழுதியது போல குணசேகரன் ஆட்டிப்படைக்க புதிதாக ஒருவர் வரப்போகிறார். இதுதான் நம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த கோலங்கள் ஆதி. ஆதியும் ஆதி குணசேகனுக்கும் இடையில் நடக்கப் போகும் யுத்தத்தில் மருமகளுக்கு கிடைக்கப் போகுது வெற்றி தான்.

ஏற்கனவே தர்ஷன் கல்யாணத்தை நல்லபடியாக முடித்து குணசேகரை தோற்கடித்தது மிகப்பெரிய வெற்றியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து குணசேகனுக்கும் குணசேகரின் தம்பிகளுக்கும் புத்தி உரைக்கும் படி இனி மருமகள்களின் ஆட்டம் இருக்கப் போகிறது. இவர்களுடன் சேர்ந்து கோலங்கள் ஆதியும் இன்னொரு பக்கம் ஆட்டிப் படைக்கப் போகிறார்.

ஒட்டுமொத்தமாக குணசேகரன் இதுவரை பண்ணிய அட்டூழியத்துக்கு தண்டனை கிடைக்கும் விதமாக இனி ஒவ்வொரு நாளும் கதற போகிறார். கோலங்கள் சீரியல் மூலம் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதை கவர்ந்த ஆதி அடுத்த வாரத்தில் இருந்து எதிர்நீச்சல் சீரியலுக்கு என்டரி கொடுக்கப் போகிறார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  சிபிஐ விசாரணைக்கு பின் பல்டி அடித்த அரசியல் தலைவர்கள் – விஜய் இதிலிருந்து பாடம் பெற வேண்டியது அவசியம்!

More in Uncategorized

To Top