Connect with us

“தர்பூசணி திவாகருக்கு GP முத்து கொட்டிய Fire! என்னா பேச்சு!”

Bigboss Season 9

“தர்பூசணி திவாகருக்கு GP முத்து கொட்டிய Fire! என்னா பேச்சு!”

பிக்பாஸ் சீசன் 9ல் “வாட்டர் மெலன் ஸ்டார்” திவாகர் அதிரடியாக எவிக்‌ஷன் ஆனது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. வீட்டுக்குள் பேச்சும் நடப்பும் நிறைய பேருக்கு பிடிக்காத நிலையில், சக போட்டியாளர்களுடனும், விஜய் சேதுபதியுடனும் ஏற்பட்ட கிளாஷ் காரணமாக அவர் வெளியேறுவது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது.

திவாகர் வெளியேறும் போது விஜே பார்வதி அழுதது மீம்ஸாகி வைரலாக, நெட்டிசன்கள் கலாய்க்கும் நிலை ஏற்பட்டது. “வீட்டுக்குள் போனா மாறிடுவார்” என நம்பிய ரசிகர்களும், திவாகரின் மாற்றமில்லாத நடத்தை காரணமாக “இப்போதாவது சும்மா இருக்கும்” என நிம்மதி அடைந்தனர்.

இந்த சூழ்நிலையில் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளரும் யூடியூப் பிரபலருமான ஜிபி முத்து, திவாகரையே நேரடியாக roast பண்ணி, “தர்பூசணி! உன்னை எங்கள் அண்ணன் விஜய் சேதுபதி இரண்டு துண்டா பிளந்துவிட்டாரா? ஆடிய ஆட்டம் என்ன? பேசிய பேச்சு என்ன? உன் நடிப்பு எல்லாம் குசுங்கி போச்சு… இப்போ போய் தர்பூசணியை ரோட்டுல வெட்டி விற்றிரு!” என்று குத்துக்கல் லெவலில் டயலாக் போட்டிருப்பது தற்போது வைரல்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  “நானும் ‘ஜனநாயகன்’ படத்திற்காக ஆவலுடன் காத்திருந்தேன்” – பாஜக உறுப்பினர் அண்ணாமலை

More in Bigboss Season 9

To Top