Connect with us

“குட்நைட் படத்தின் ஹீரோயின் மீதா ரகுநாத்க்கு முடிந்தது நிச்சயதார்த்தம்..! வெளியான Viral Pics!”

Cinema News

“குட்நைட் படத்தின் ஹீரோயின் மீதா ரகுநாத்க்கு முடிந்தது நிச்சயதார்த்தம்..! வெளியான Viral Pics!”

நடிகர் மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து சமீபத்தில் வெளியானது குட்நைட் படம். இந்தப் படத்தை விநாயக் சந்திரசேகரன் இயக்கியிருந்தார். கதையை மட்டுமே நம்பி குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இந்த ஆண்டில் தமிழில் வெளியான வெற்றிப் படங்களின் வரிசையில் இணைந்துள்ளது. தூக்கம், குறட்டை என எளிமையான விஷயங்களை இந்தப் படத்தின்மூலம் சுவாரஸ்யமாக்கியிருந்தார் இயக்குநர்.

இந்நிலையில் மீதாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் இவரது நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. தன்னுடைய வருங்கால கணவருடன் மீதா எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. தனியாகவும் அவரது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. விரைவில் திருமணம் நடைபெறும் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில் மீதாவிற்கு சமூக வலைதளங்கள் மூலமாக ரசிகர்கள் தொடர்ந்து வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

முதல் நீ முடிவும் நீ மற்றும் குட்நைட் என இரு படங்களில் மட்டுமே நடித்துள்ள மீதா தற்போது திருமணம் செய்துக் கொள்ளவுள்ள நிலையில் அவர் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. முன்னதாக எழுத்தின் மீதான ஆர்வத்தால் மட்டுமே தன்னுடைய சொந்த ஊரான ஊட்டியிலிருந்து இவர் சென்னைக்கு வந்தார். அப்போது முதல் நீ முடிவும் நீ படத்தின் ஆடிஷனில் பங்கேற்று 3000 பேர்களில் ஒருவராக இவர் நாயகியாக தேர்வானார்.

தொடர்ந்து குட்நைட் படமும் மீதாவிற்கு சிறப்பாக அமைந்தது. குறட்டை பிரச்சினையால் கஷ்டப்படும் இளைஞனுக்கு தோள் கொடுக்கும் கேரக்டரை சிறப்பாக செய்திருந்தார். இந்த இரு படங்களில் மீதாவின் அதிகமாக மேக்கப் போடாத கெட்டப் மற்றும் இயல்பான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. குறிப்பாக குட்நைட் சிறந்த அங்கீகாரத்தை மீதாவிற்கு கொடுத்துள்ள நிலையில் அவர் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

More in Cinema News

To Top