Connect with us

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகர்கள் – சாதுரியமாக செயல்பட்டு மீட்டெடுத்த பேரிடர் மீட்டுப்புக்குழு..

Cinema News

சென்னை வெள்ளத்தில் சிக்கிய பிரபல நடிகர்கள் – சாதுரியமாக செயல்பட்டு மீட்டெடுத்த பேரிடர் மீட்டுப்புக்குழு..

மிக்ஜாம் புயலால் வெள்ள நீரில் சிக்கி தவித்த பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கான், மற்றும் விஷ்ணு விஷால் ஆகியோர் பேரிடர் மீட்பு குழுவால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் வெளுத்து வாங்கிய கனமழையில் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் பெரு வெள்ளம் சூழ்ந்தது இதனால் அடிப்படை தேவைகளை கூற பெற முடியாமல் பொதுமக்கள் அனைவரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இந்நிலையில் கோரத்தாண்டவம் ஆடி வந்த கனமழை தற்போது மெல்ல மெல்ல குறைய தொடங்கி உள்ளதால் சீரமைக்கும் பணிகள் தற்போது மும்மரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு அரசு முடுக்கிவிட்டுல இந்த சீரமைப்பு பணியில் பல்லாயிரக்கணக்கானோர் முழு வீச்சில் வேலை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், சென்னை காரப்பாக்கம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கி இருப்பதாகவும் எங்களை விரைந்து வந்து மீட்கவும் நடிகர் விஷ்ணு விஷால் ட்வீட் ஒன்றை போட்டுள்ளார்.அந்த பதிவை கண்ட பேரிடர் மீட்புக்குழு உடனே விரைந்து வந்து நடிகர் விஷ்ணு விஷால் , அருகில் சிக்கி இருந்த பிரபல பாலிவுட் நடிகர் அமீர்கான் ஆகியோரை காப்பாற்றி படகு மூலம் பத்திரமாக மீட்டனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  DNA பரிசோதனைக்கு நீதிமன்றம் உத்தரவு – மகன் புகைப்படத்தை வெளியிட்ட ஜாய் கிரிசில்டா!

More in Cinema News

To Top