Connect with us

“பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகம்!”

Cinema News

“பிரபல நடிகர் கங்கா மாரடைப்பால் திடீர் மரணம்..! அதிர்ச்சியில் திரையுலகம்!”

தமிழ் சினிமாவில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்திர வேடத்திலும் நடித்து பிரபலமான கங்கா, திடீர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவருக்கு வயது 63. பல படங்களில் இரண்டாவது ஹீரோ போன்ற வேடத்தை ஏற்று நடித்து, மிகவும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.

திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வந்த இவர் தனது சகோதரர் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளார். இந்த சூழலில் மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்துள்ளார். சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். உயிருள்ளவரை உஷா, கரையை தொடாத அலைகள், மீண்டும் சாவித்திரி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் உயிருள்ளவரை உஷா அவரது முதல் படம்.

கங்காவின் மறைவு திரையுலகினருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரின் இறுதி சடங்குகள், அவரது சொந்த ஊரான சிதம்பரத்தில் நடைபெறும் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  காந்தாரா சாப்டர் 1 பாக்ஸ் ஆபிஸ் கிங், கன்னட சினிமாவின் புதிய மைல்கல்!

More in Cinema News

To Top