Connect with us

“பெண்மையை இழிவுப்படுத்துவது மகாகுற்றம்” – த்ரிஷாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர்.

Cinema News

“பெண்மையை இழிவுப்படுத்துவது மகாகுற்றம்” – த்ரிஷாவுக்கு ஆதரவு குரல் கொடுத்த முன்னாள் அமைச்சர்.

திரைத்துறை மற்றும் நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் அவதூறாக பேசியுள்ளது பெரும் சர்ச்சை ஆகி வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

யூடியூப் சேனல் ஒன்றிற்கு சமீபத்தில் பேட்டி கொடுத்த சேலத்தை சேர்ந்த அதிமுகவின் முன்னாள் நிர்வாகி ஒருவர், கூவத்தூர் சம்பவம் குறித்து சில வாய்க்கூசும் அவதூறு பேச்சுக்களை கண்டபடி பேசியுள்ளார்.

இந்நிலையில் திரைத்துறை மற்றும் நடிகை திரிஷா குறித்து அதிமுக முன்னாள் நிர்வாகி ஒருவர் அவதூறாக பேசியுள்ளது பெரும் சர்ச்சை ஆகி வரும் நிலையில் இந்த சம்பவத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஜெயக்குமார் கூறியதாவது :

“பெண்மையை இழிவுபடுத்தக் கூடாது அது மகாகுற்றம் . நடிகை த்ரிஷா மிகவும் மனம் வருந்தி அந்தப் பதிவை எழுதியிருக்கிறார். அந்த காணொலியில் பேசப்பட்ட விஷயங்களை கேட்கும்போதே அருவருப்பாக இருந்தது.

நடிகை த்ரிஷா குறித்து அவர் பேசிய இழிவான கருத்துகள் என்பது மனித சமுதாயம் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயம்.

அவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  REVIEW - மவுனத்தில் பேசும் கருத்து – ‘காந்தி டாக்ஸ்’ ஒரு நிதானமான சமூகத் திரைப்படம்

More in Cinema News

To Top