Connect with us

Hero, Villain இல்லாத புதுவித கதைக்களம்! ‘ஈரப்பதம் காற்று மழை’ படத்தின் Director சொன்ன விஷயம்!

Cinema News

Hero, Villain இல்லாத புதுவித கதைக்களம்! ‘ஈரப்பதம் காற்று மழை’ படத்தின் Director சொன்ன விஷயம்!

வெற்றி, கிஷன் தாஸ், தீப்தி நடிக்கும் படத்துக்கு ‘ஈரப்பதம் காற்று மழை’ என்று பெயர் வைத்துள்ளனர். இந்தப் படத்தை பிக் பிரின் ட் பிக்சர்ஸ் சார்பில் ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். சலீம் ஆர் பாட்ஷா இயக்குகிறார்.

அமல் டோமி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு ஸ்ரீராம் வெங்கடேஷ் இசை அமைக்கிறார். படம் பற்றி இயக்குநர் சலீம் ஆர் பாட்ஷா கூறியதாவது, குறும்படங்கள் இயக்கிவிட்டு, நேரடியாக இந்தப் படத்தை இயக்குகிறேன். இது சைக்காலஜிக்கல் டிராமா வகை படம். மனித உணர்வுகள் எப்போதும் ஒன்றாக இருக்காது.

அது மாறிக்கொண்டே இருக்கும். அதே போலதான், நம் வானிலையும் நிரந்தரமாக இருக்காது. அதனால்தான் இந்தக் கதைக்கு ‘ஈரப்பதம் காற்று மழை’என்று தலைப்பு வைத்தேன். வெற்றி, கிஷன் தாஸ், தீப்தி ஆகியோரைச் சுற்றி நடக்கும் கதைதான் படம். வழக்கமான டெம்பிளேட்டுக்குள் இதன் திரைக்கதை இருக்காது.

அது இந்தப் படத்தின் சிறப்பு என்று சொல்லலாம். இதில் ஹீரோ, வில்லன் என்று யாரும் இல்லை. எழுத்தாளர் பாக்கியம் சங்கர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். 75 சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இவ்வாறு சலீம் ஆர் பாட்ஷா கூறினார்.

மேலும் சில பல சுவாரசியமான சினிமா,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட பல செய்திகளை தெரிந்து கொள்ள cinemamedai.com சேனலுக்கு Subscribe பண்ணுங்க….

See also  🎬 பான்–இந்தியா இயக்குநர் சுகுமார் சொன்ன ஒரே வார்த்தை – ‘அவதார் 3’ மறக்க முடியாத அனுபவம்

More in Cinema News

To Top